கம்பராமாயணம் 8513 · யுத்த 21.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“செய்கின்றார் இருவர் வெம்போர் - “கொடிய போரைச் செய்கின்றவர்களோ இருவரே; சிதைகின்ற சேனை நோக்கின் - (இவர்களால்) சிதைந்தொழியும் சேனைகளை எண்ணிப் பார்த்தாலோ; ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபது - ஐயம் அற்றவகையில் அறுபது வெள்ளம் என்னும் தொகையினவாகும்; “அவிக” என்று வைகின்றார் அல்லர் - (இவையாவும் ஒருசேர) அழிந்தொழிக என்று சபித்துரைக்கின்றவர்களும் அல்லர்; ஆகின் வரிசிலை வலத்தால் மாள எய்கின்றார் அல்லர் - ஆனால், வரிந்து கட்டப்பெற்ற வில்லின் துணை கொண்டு தம் வன்மை விளங்க (பகைவர்சேனை) மாளும்படி வலிந்து எய்கின்றவர்களும் அல்லர்; “ஈது எவ் இந்திரசாலம்?” என்றான் - (இப்பெரும் சேனையை அழித்த) இச்செயல் எத்தகைய இந்திரசால வித்தையோ?” என்று வியந்து கூறினான் (இந்திரசித்து)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those waging this fierce war are two; the army being destroyed, if you look,
- is sixty veḷḷams beyond doubt; they are not cursing it,
- saying "Perish!"; yet neither are they shooting so that it dies
- by the strength of their banded bows; what magic is this?' he said.
What the poem says
Intiracittu tries to make sense of what he sees. There are only two of them, and they are destroying sixty veḷḷams. They are not sages killing with a curse, yet they do not seem to be straining at their bows either.
He concludes it must be some kind of sorcery. The word he uses, intiracālam ('Indra's net'), is the usual Tamil term for magic and illusion.