கம்பராமாயணம் 8515 · யுத்த 21.28

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலைகளைப் பார்ப்பான்; மற்று அவ் வான் உறக் குவிந்த - அம்மலைகளைப் போன்று) விண் அளவும் பொருந்தக் குவிந்துள்ள; வன்கண் தலைகளை நோக்கும் - தறுகண்மை மிக்க கண்களோடு கூடிய (அரக்கர்களின்) தலைகளைப் பார்ப்பான்; வீரர் சரங்களை நோக்கும் - அத்தலைகளைத் துண்டித்த ஆற்றல் மிக்க) வீரர் (இருவருடைய) அம்புகளின் வன்மையைக் கருதிப் பார்ப்பான்; தாக்கி உலை கொள்வெம் பொறியின் உக்க - (அம்புகளால்) தாக்கப்பட்டு உலைக் களத்திலே சிதறிக் கிடக்கும் அனற் பொறிகளைப் போன்று சிதறியுள்ள; படைக்கலத்து ஒழுங்கை நோக்கும் - (தன் சேனை வீரர்களின்) ஆயுதங்களின் தொடர்ச்சியினை உற்றுப் பார்ப்பான்; சிலைகளை நோக்கும் - (இத்தகைய அம்புகளைச் சொரிந்த இருவருடைய) விற்படைகளை எண்ணிப் பார்ப்பான்; நாண் ஏற்று இடியினைச் செவியின் நோக்கும் - அவ்விற்களில் நாணேற்றுதலால் உண்டாகிய இடி முழக்கத்தினைத் தன் செவிகளால் ஓர்ந்து நோக்குவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looks at the mountains; he looks at those fierce-eyed heads
  2. piled up to touch the sky; he looks at the heroes' arrows; he looks
  3. at the trail of weapons scattered when struck, like hot sparks flying from a forge;
  4. he looks at the bows; with his ears he takes in the thunder of their drawn strings.

What the poem says

Intiracittu keeps staring: at heaps like mountains, at the severed heads of his fierce-eyed warriors piled sky-high, at the arrows that cut them off.

His army's weapons, smashed by the brothers' arrows, lie scattered like sparks flying from a blacksmith's forge. He looks at the two bows, and even 'looks' with his ears at the thunder of their bowstrings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaikaḷai nōkkum; maṟṟu av vāṉ uṟak kuvinta vaṉ kaṇ
talaikaḷai nōkkum; vīrar caraṅkaḷai nōkkum; tākki
ulai koḷ vem poṟiyiṉ ukka paṭaikkalattu oḻukkai nōkkum;
cilaikaḷai nōkkum; nāṇ ēṟṟu iṭiyiṉaic ceviyiṉ nōkkum