கம்பராமாயணம் 8516 · யுத்த 21.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை - ஆயிரக்கணக்கான தேர்களையும், வெற்றியை உடைய யானைகளையும்; அலங்கல் மாவை - மாலையணிந்த குதிரைகளையும்; ஆயிரம் தலையை ஆழிப் படைகளை - ஆயிரக்கணக்கான (வீரர்) தலைகளையும், சக்கரப் படைகளையும்; அறுத்தும் அப்பால் போயின - அறுத்தும் அப்பாற் சென்ற; பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும் - அம்புகளின் விரைவுத் தன்மையினைப் புரிந்து நோக்குவான்; பாயும் வெம்பகழிக்கு - பாய்ந்து (ஊடுருவிச்) செல்வனவாகிய அம்புகளுக்கு; ஒன்றும் கணக்கிலாப் பரப்பைப் பார்க்கும் - சிறிதும் கணக்கிட்டுக் கூறுவதற்கில்லாத போர்க்களத்தின் பரப்பினை உற்றுப் பார்ப்பான்.
பகைவராயினும் அவர்தம் பேராற்றலை வியந்து விரும்பி நிற்கும் இந்திரசித்தனின் பண்பைக் கூறி பகைவனும் வியந்து நிற்கும் இராம இலக்குவரின் போர்த்திறனைப் புலப்படுத்துகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A thousand chariots, victorious elephants, garlanded horses,
- a thousand heads, discus-wielding troops — cutting through all these, the arrows
- went on beyond; he looks with understanding at their speed and force;
- he gazes at the expanse of field, beyond all counting, over which the fierce arrows leap.
What the poem says
Intiracittu studies the force of the brothers' arrows. Each one passes clean through thousands of chariots, elephants, horses, heads and troops, and still flies on.
He gazes at the vast, uncountable stretch of the battlefield that their arrows cover. The commentary notes that by showing even the enemy marvelling at Irāmaṉ and Ilakkuvaṉ, the poet makes their prowess all the clearer.