கம்பராமாயணம் 852 · பால 13.48

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உயிர்த்துணை நுழை - ஆண்களின் உயிர்வரை சென்று நுழையும்; கலி - வலிமையுள்ள; கருங்கண்ணியர் - கரிய கண்களையுடைய மாதர்கள் பூண்ட; நூபுரம் இழை - சிலம்பென்னும் அணிகள்; உழை கலித்தன என்ன - மான்கள் செருக்கி எழுந்தன எனத்தக்க தோற்றமுடைய உழை என்னும் பண் ஒலித்தாற் போல; கலித்தன - ஒலித்தன; இன் இயமா - (அவ்வாறு ஒலித்தவற்றுக்கு) இனிய பக்கவாத்தியமாக; எழுமழை கலித்து என - (வானத்தில்) எழும் மேகம் இடித்தாற் போல; வாசி கலித்த - குதிரைகள் கனைத்தன.

ஒருவர் பாடுகையில் அதனைச் சிறப்பித்தற்காக மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழக்கப்படுவது மரபு; அதுவே பக்கவாத்தியம் எனப்படும். மாதர் சிலம்புகள் ஒலிக்க அந்த இசைக்குப் பக்க வாத்தியம் என்று சொல்லுமாறு குதிரைகள் கனைத்தன. இழை - இழைத்துச் செய்யப்பெறும் ஓர் அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the uḻai melody were ringing out, the jewelled anklets
  2. of the dark-eyed women, whose eyes pierce right through to their lovers' lives,
  3. rang out; and, like sweet instruments accompanying them,
  4. the horses neighed like rising thunderclouds.

What the poem says

The chiming anklets of the women sound like a singer performing uḻai, one of the classical Tamil melodic modes. The neighing of the horses, deep as thunder, provides the accompaniment, as a drum accompanies a singer.

The whole procession becomes a kind of concert.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḻai kalittaṉa eṉṉa uyirt tuṇai
nuḻai kalik karuṅ kaṇṇiyar nūpura
iḻai kalittaṉa; iṉ iyamā eḻum
maḻai kalitteṉa vāci kalittavē.