கம்பராமாயணம் 8522 · யுத்த 21.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் - போர்க்களத்தில் பொருது நிற்கும் பெருமையுடைய அறுபது வெள்ளம் அரக்கர் சேனையும்; தலத்தது ஆக - (அழிவுற்ற) நிலத்தின் கண்ணதாய் மடியவும்; அளப்பருந்தேரின் உள்ள ஆயிரகோடி ஆக - அளந்து அறிதற்கிலாத தேர்களின் மேலுள்ள (அரக்கர் சேனை ஆயிரங்கோடி என்னும் அளவுடையதாய் நிற்கவும்; துளக்கம் இல் ஆற்றல் வீரர் - மனங்கலங்குதல் இல்லாத ஆற்றல் மிக்க வீரர்களாகிய இராம இலக்குவர்; பொருத போர்த் தொழிலை நோக்கி - எதிர்த்து நின்ற போர்ச் செயலைக் கண்ணுற்று; அஞ்சனை மதலை - அஞ்சனை என்பாளது மகனான அனுமன்; அளப்பருந் தோளைக் கொட்டி ஆர்த்தான் - அளத்தற்கரிய (தனது) தோளைத் தட்டிக்கொண்டு பெருமுழக்கம் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With all sixty veḷḷams of the great battle host lying on the ground,
- and only the thousand crores on their countless chariots remaining,
- watching the war-work of the heroes of unshaken might,
- the son of Añcaṉai slapped his measureless shoulders and roared.
What the poem says
Now the whole demon army lies dead on the ground except for the thousand crores of chariot-borne demons.
Aṉumaṉ, son of Añcaṉai, carrying Irāmaṉ on his shoulders, has watched the brothers fight, and in sheer exhilaration he slaps his own huge shoulders and lets out a roar.