கம்பராமாயணம் 8524 · யுத்த 21.37

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மஞ்சினும் கரிய மெய்யான் - மேகத்தினும் கருமையான உடலை உடையவனாகிய இந்திரசித்து, “இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர் - “இப்பொழுது ஓர் ஆரவார ஒலிக்கே மனமழியும் தன்மையுடையவர்களாய்; அஞ்சினிர் - அஞ்சியவர்களே; போமின் - இவ்விடத்தை விட்டு) போய் விடுங்கள்; வெஞ்சமம் விளைப்பது என்னா - (இத்தகைய அச்சங் கொண்டவர்களாகிய நீங்கள் வெம்மையுடைய போர்த்தொழிலை நிகழ்த்துதல் எவ்வாறு முடியும்? நீரும் இவ்வீரரோடு துஞ்சினீர் போலும் அன்றே? - (உயிருடன் உள்ள) நீங்களும் (உயிர் நீங்கப் பிணமாய்க் கிடக்கும்) இவ்வீரர்களுடன் ஒப்ப இறந்தொழிந்தீர்கள் அல்லவா? என்று அவர்ச் சுளித்து நோக்கி - என்று கூறி அவர்களைச் சினந்து பார்த்து; இருவர் மேல் ஒருவன் வந்தான் - (இராம இலக்குவர் இருவர் மீதும் தான் ஒருவனாகவே பொருதற்கு வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You are afraid: go! You who are fit to be undone today by a single shout,
  2. how can you wage fierce war? You too are as good as dead
  3. alongside these warriors, are you not?' — so saying, he glared at them in anger,
  4. and he whose body was darker than a rain cloud came alone against the two.

What the poem says

Intiracittu turns on his own fleeing troops with contempt. If they can be destroyed by one shout, they are useless in battle; they may as well be lying with the corpses.

He sends them away, and then the dark demon prince advances alone against the two brothers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'añciṉir, pōmiṉ; iṉṟu, ōr ārppu olikku aḻiyaṟpālir
veñ camam viḷaippatu eṉṉā? nīrum iv vīrarōṭu
tuñciṉir pōlum aṉṟē? eṉṟu avarc cuḷittu nōkki
mañciṉum kariya meyyāṉ iruvarmēl oruvaṉ vantāṉ.