கம்பராமாயணம் 8526 · யுத்த 21.39

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாற்றம் ஒன்று இளையவன் வளைவில் செங் கரத்து
ஏற்றினை வணங்கி நின்று இயம்புவான் : 'இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர்
தோற்றனன் 'என்று எனை உலகம் சொல்லுமால்

பொருள் · Meaning in Tamil

இளையவன் - இளையோனாகிய இலக்குவன்; வளைவில் செங்கரத்து ஏற்றினை வணங்கி நின்று - வளைந்த வில்லினைப் பிடித்த சிவந்த கையினை உடைய ஆண்சிங்கம் போல்வானாகிய இராமனை வணங்கி நின்று; மாற்றம் ஒன்று இயம்புவான் - (பின்வருமாறு) ஒரு வார்த்தையைக் கூறுவானாயினான்; “இகல் ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப - “போரில் எதிர் நிற்கும் ஆற்றலவனாகிய இந்திரசித்து நாகபாசத்தைக் கொண்டு இறுகப் பிணித்தமையால்; ஆர் அமர் தோற்றனென் என்று கொண்டு - அரிய போரில் யான் தோல்வியுற்றதாகக் கொண்டு; உலகம் சொல்லும் - (என்னைக் குறித்து) உலகம் பழி கூறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The younger one bowed to the lion-like one with the curved bow in his red hand,
  2. and standing there, spoke a word: 'Because that one, mighty in war,
  3. bound me with the serpent, the world takes it
  4. that I was beaten in hard battle, and says so.'

What the poem says

Ilakkuvaṉ bows to his brother and asks a favour. Earlier in the war Intiracittu bound him, and many others, with the nāgapācam, a magical noose of serpents, and he was freed only when Garuḍa came.

Because of that, he says, the world now speaks of him as a man defeated in battle. The metre changes here to a shorter four-line form, as the poet often does when a new speech begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟṟam oṉṟu iḷaiyavaṉ vaḷai vil ceṅkarattu
ēṟṟiṉai vaṇaṅki niṉṟu iyampuvāṉ: 'ikal
āṟṟalaṉ aravu koṇṭu acaippa ār amar
tōṟṟaṉeṉ 'eṉṟu koṇṭu ulakam collumāl