கம்பராமாயணம் 8527 · யுத்த 21.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காதல் நண்பரைக் காக்கவும் கற்றிலன் - (தன்பால்) அன்புடைய நண்பர்களைக் காப்பாற்றவும் (ஆற்றலற்றான்) அறிந்திலன்; ஒருவன் பொய்ப்பிணி போக்கவும் கற்றிலன் - (பகைவன்) ஒருவன் வஞ்சனையாற் செய்த (நாகபாசமாகிய) பிணிப்பினைப் போக்குதற்கும் அறிந்திலன்; வென்றி ஆக்கவும் கற்றிலன் - (பகைவனைத் தொடர்ந்து பொருது) தனக்கு வெற்றியை உண்டாக்கிக் கொள்ளுதற்கும் அறிந்திலன்; ஆர் உயிர் நீக்கவும் கற்றிலன் - (இந்நிலையில் தனது பெருமை நிலைபெற) அரிய உயிரைத் துறப்பதற்கும் அறிந்திலன்; என்று நின்றது - என்றுள்ள பழி (எனக்கு உலகில் நிலை பெற்று விட்டது.
“ஒருவன்” என்றது இந்திரசித்தனை, அவன் வெளிப்பட நின்று போர் செய்யாது மாயத்தால் மறைந்து நின்று நாகபாசத்தை ஏவினமையால் அது “பொய்ப்பிணி” எனப்பட்டது. பொய்ப்பிணி - பொய்ம்மையைத் துணையாகக் கொண்டு பிணித்த பிணிப்பு. நண்பர்கட்குத் தீங்கு வாராமல் முன்னறிந்து காத்தல் வீரர்கடன். அது தவறின் தீங்கு வந்தவுடன் அதனைக் களைந்திருக்க வேண்டும். முடியாத போது தன்னையாவது காத்துக்கொண்டு பகைவனை விடாது பொருது பழி தீர்த்திருக்க வேண்டும். அதுவும் இயலாத பொழுது உயிர் விடுத்து மானங்காத்திருத்தல் வேண்டும். எதுவும் செய்திலன் என இரங்கிக் கூறுகின்றான் இலக்குவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"He never learned to protect his dear friends;
- he never learned to cast off the false bondage one man laid on him;
- he never learned to win victory; nor did he learn
- to give up his precious life" — that is what has stuck to me.'
What the poem says
Ilakkuvaṉ lists the four charges the world lays against him. He did not protect his friends from harm; he could not free himself from the noose that 'one man' put on him; he did not go on fighting and win; and he did not die to save his honour.
The noose is called 'false bondage' because Intiracittu did not fight openly but hid by magic and shot it from concealment. The commentary sets out the warrior's code behind the lament: guard your friends, undo the harm if you fail, fight on for revenge if you cannot, and if all else fails, give your life rather than lose your honour.