கம்பராமாயணம் 8530 · யுத்த 21.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆழியாய் - ஆணைச் சக்கரத்தை உடையவனே! கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க - விரைவினில் உலகம் எல்லாம் நோக்கி நிற்கும் போழ்தே; என் சுடுசரம் இவன் தலை துணிக்கலாது எனின் - என்னுடைய சுட்டழிக்க வல்ல அம்பு இந்த இந்திரசித்தனின் தலையை அறுத்தெறியவில்லை என்றால்; முடிய ஒன்று உணர்த்துவேன் - முடிவாக ஒரு பொருள் (உனக்கு மொழிவேன்; உனக்கு நான் முயல் அடிமையின் பயன் இகந்து அறுக - உனக்காக நான் முயல்கின்ற அடிமைச் செயலின் பயன் (என்னை விட்டு) நீங்குவதாக.
சூளுரையின் உச்சமாக இராமனுக்குத்தான் செய்யும் அடிமைத் தொழிலினால் தனக்குக் கிடைக்கவிருக்கும் பெரும்பேற்றினைக் கூட இழந்து விடத் தயாராகின்றான் இலக்குவன். சூளுரை கூறுவார் தமக்கு இன்றியமையாத விருப்பமான பொருளில் வைத்துச் சூளுரை கூறுவர் என்பதனை நோக்க இராம சேவையில் இலக்குவனுக்கு உள்ள ஈடுபாடு பெரிதும் விளங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If, quickly, with all the world standing and watching, my
- burning arrow does not cut off this one's head,
- I declare one thing to settle it: may the fruit of the service
- I strive to give you leave me and be cut off, O lord of the discus!'
What the poem says
Ilakkuvaṉ completes his vow with the most solemn pledge he can make. If he fails to behead Intiracittu with the whole world watching, may he lose all the merit he has gained by serving his brother.
The commentary notes that people swear by whatever they hold most precious. That Ilakkuvaṉ stakes his service to Irāmaṉ shows how completely his life is bound up in it.