கம்பராமாயணம் 8531 · யுத்த 21.44

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள் - (சொல்லிய வண்ணம் செய்ய) வல்லவனாகிய இலக்குவன் அத்தகைய வஞ்சின மொழியைக் கூறிய அளவில்; அமரர் “அல்லல் நீங்கினம்” என ஆர்த்தனர் - வானவர்கள் “இனி நாம் துன்பம் நீங்கப் பெற்றேம்” என ஆரவாரித்தனர்; எல்லையில் உலகங்கள் யாவும் ஆர்த்தன - எல்லையில்லாத உலகங்களிலுள்ள எல்லா உயிர்களும் (மகிழ்ச்சியால்) ஆரவாரித்தன; நல் அறம் ஆர்த்தது - நன்மையை உடைய அறக்கடவுளும் ஆரவாரித்தது; நமனும் ஆர்த்தனன் - கூற்றுவனும் ஆரவாரித்தான்.

சொல்லிய வண்ணஞ்செய்யும் ஆற்றலுடையவனாகலின் இலக்குவன் வல்லவன் எனப்பட்டான். தீமையின் ஆற்றலின்முன் நன்மைச் சார்பாளராகிய வானவர் அடிமைப்பட்டுக் கிடத்தலின், “இனி அவ்வடிமைத் தன்மை நீங்கப்பெறுவேம்” எனக் கொண்டு ஆரவாரித்தனர். உலக உயிர்களெல்லாம் “இரக்கமில் சிந்தையராகிய” அரக்கரின் ஆளுகையால் அல்லலுற்று நின்றமையின் இனி அவ்வல்லல் இல்லையாமென ஆரவாரித்தன. அறக்கடவுளின் நியதி உலகில் செல்லாவண்ணம் அரக்கர் தடையாயிருந்தனர். “இனி அத்தடை நீங்கிற்றென” அவன் ஆர்த்தனன். நெருங்குதற்கரிய அரக்கர் உயிரை இனி எளிதிற் கொள்ளலாமெனக் கூற்றுவனும் ஆர்த்தனன் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The moment the mighty one uttered that vow,
  2. the immortals roared, 'We are rid of our sorrow!';
  3. all the boundless worlds roared;
  4. good Dharma roared; and Yama, too, roared.

What the poem says

As soon as Ilakkuvaṉ, who always does what he says, makes his vow, the whole universe cheers. The gods cheer because their long subjection to the demons is about to end, and the beings of all the worlds because the cruel demons' rule will be lifted.

Dharma, the god of righteousness, cheers because the demons have blocked the working of moral order. Even Yama, god of death, cheers: the demons' lives, so long beyond his reach, will now be easy to take.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vallavaṉ av urai vaḻaṅkum ēlvaiyuḷ
'allal nīṅkiṉam eṉa amarar ārttaṉar;
ellai il ulakaṅkaḷ yāvum ārttaṉa;
nal aṟam ārttatu; namaṉum ārttaṉaṉ.