கம்பராமாயணம் 8533 · யுத்த 21.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சொல் அது கேட்டு அடி தொழுது - (இராமபிரான் உளமுவந்து கூறிய) அம்மொழியினைக் கேட்டு (அப்பிரானுடைய) திருவடிகளை வணங்கி; சுற்றிய பல் பெருந் தேரொடும் - சுற்றிச் சூழ்ந்த பலவாகிய தேர்களுடனே; அரக்கர் பண்ணையைக் கொல்வல் - அரக்கர் தொகுதியை இப்பொழுதே கொன்றொழிப்பேன்; இங்கு அன்னது காண்டி கொல் - இங்கு அதனைக் காண்பாயாக; எனா - என்று கூறி; உவகை உள்ளத்தான் - மகிழ்ச்சி நிரம்பிய மனத்தினனாகிய இலக்குவன்; ஒல்லையில் எழுந்தனன் - விரைந்து போருக்குப் புறப்பட்டான்.
பண்ணை - தொகுதி. தனது வஞ்சின மொழியினை மதித்துப் பாராட்டி இந்திரசித்தனைக் கொல்லும் செயலினைத் தனக்கே விடுத்தமையின் இலக்குவன் பெரிதும் மகிழ்ந்தனன் என்பதனை “உவகை உள்ளத்தான்” என்பதனாற் குறித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing that word, he bowed at his feet: 'The host of demons
- with their many great chariots surrounding us
- I will kill; watch it here!' — saying so,
- he rose at once, his heart full of joy.
What the poem says
Ilakkuvaṉ bows at his brother's feet and promises to destroy the whole chariot host surrounding them, while Irāmaṉ watches.
He sets out at once, overjoyed. The commentary explains his joy: Irāmaṉ has honoured his vow and left the killing of Intiracittu to him alone.