கம்பராமாயணம் 8535 · யுத்த 21.48

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு; வேல் முசுண்டி மூவிலை
கழு அயில் கப்பணம் கவண்கல் கன்னகம்
விழுமலைக்கு இரட்டிவிட்டு அரக்கர் வீசினார்.

பொருள் · Meaning in Tamil

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம் - எழுக்கள், மழுக்கள், சக்கரங்கள், ஈட்டிகள், தோமரங்கள்; முழு முரண் தண்டு வேல், முசுண்டி, மூவிலை கழு - நிறைந்த வன்மை கொண்ட கதாயுதங்கள், வேற்படைகள், முசுண்டிகள், மூன்று இலைவடிவமான கழுக்கள்; அயில் கப்பணம், கவண்கல், கன்னகம் - கூரிய கப்பணங்கள், கவணில் அமைத்து வீசுங்கற்கள், கன்னகங்கள் ஆகிய இப்படைகளை; விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார் - விண்ணினின்று சொரியும் மழையைக் காட்டிலும் இரு மடங்காக அரக்கர்கள் வீசி எறிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Iron bars, battle-axes, discuses, lances, javelins,
  2. maces of full might, spears, mucuṇṭis, three-pronged tridents,
  3. sharp kappaṇams, sling-stones, kaṉṉakams:
  4. the demons hurled these, twice as thick as falling rain.

What the poem says

The demons answer with everything they have. The poet lists their weapons: iron clubs, axes, war discuses, lances, javelins, maces, spears, trident-like stakes, slingstones, and several weapons such as the mucuṇṭi, kappaṇam and kaṉṉakam whose exact forms are uncertain.

They throw them at the brothers twice as thick as a rainstorm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻu maḻu cakkaram īṭṭi tōmaram
muḻu muraṇ taṇṭu; vēl mucuṇṭi mūvilai
kaḻu ayil kappaṇam kavaṇ kal kaṉṉakam
viḻu maḻaikku iraṭṭi viṭṭu arakkar vīciṉār.