கம்பராமாயணம் 8536 · யுத்த 21.49

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்து என
வானெலாம் மண்ணெலாம் மறைய வந்தன
தானெலாம் துணிந்து போய்த் தகர்ந்து சாய்ந்தன;
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்

பொருள் · Meaning in Tamil

வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன - (மழைக்கு இரட்டிப்பாய் அரக்கரால் வீசப்பெற்று) வான் முழுதும் மண் முழுதும் மறையுமாறு வந்தனவான படைக்கலன்கள்; வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் - வேனிற் காலத்துக்கு உரியவனான மன்மதனை ஒத்த பேரழகினை உடைய இலக்குவனது அம்புகளின் கடுமையால், மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென - விண்மீன்களெல்லாம் விசும்பினின்றும் ஒருசேர வீழ்ந்தன எனும்படி; தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின - அனைத்தும் துண்டுபட்டுப் பொடியாகச் சிதறி ஒளிவிட்டுக் கிடந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if all the stars had fallen together from the sky,
  2. the weapons that came, hiding all the heavens and all the earth,
  3. were cut to pieces one and all, shattered, and lay glowing,
  4. through the heat of the arrows of the one like the god of spring.

What the poem says

The weapons fill earth and sky, but Ilakkuvaṉ's arrows cut every one of them to pieces. The glowing fragments litter the ground as if all the stars had fallen at once.

Ilakkuvaṉ is compared to Kāmaṉ, the handsome god of love, whose season is spring; the comparison stresses his beauty even in the heat of battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṉ elām viṇṇiṉniṉṟu oruṅku vīḻnteṉa
vāṉ elām maṇ elām maṟaiya vantaṉa
tāṉ elām tuṇintu pōyt takarntu kāntiṉa;
vēṉilāṉ aṉaiyavaṉ pakaḻi vemmaiyāl