கம்பராமாயணம் 8538 · யுத்த 21.51

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
வடி நெடுஞ் சிலை அறும்; கவசம் மார்பு அறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முகிலும் சிந்துமால்.

பொருள் · Meaning in Tamil

தேர் அடி அறும் - (மற்றும் அவ்இலக்குவன் எய்த அம்புகளினால்) தேர்களின் அடிப்பகுதி அற்றுச் சிதையும்; முரண் ஆழி அச்சு இறும் - வலிய தேர்ச்சக்கரங்களின் அச்சு அற்றுச் சிதையும்; கடி நெடுஞ்சிலை அறும் - வலிய நெடிய விற்கள் முறியும்; கவச மார்பு இறும் - (வீரர்களின்) கவசம் அணிந்த மார்பு பிளக்கப் பெறும்; கொடி அறும், குடை அறும் - கொடிகள் அறுபடும் (அத்துடன்) குடைகள் முறியும்; கொற்ற வீரர்தம் முடி அறும் - வெற்றி மிக்க வீரர்கள் (அணிந்த) முடிகள் அறுந்துபோகும்; முரசு அறும் - (வெற்றிக்கு அறிகுறியாக அடித்தற்கு வைத்துள்ள) வீர முரசு கிழிந்துபடும்; முழுதும் சிந்துமால் - (இங்ஙனம்) எஞ்சுதல் இன்றி அனைத்தும் அழிவனவாயின.

இச்செய்யுள் சொற்பொருட் பின்வருநிலையணி அமையப் பெற்றது. அடியென்று தொடங்கி இறுதி அடியில் முடியென்று வந்த நயமும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chariot bases are severed; the axles of the strong wheels snap;
  2. tall mighty bows are cut; armoured chests are broken;
  3. banners are cut; parasols are cut; the crowns
  4. of victorious warriors are cut; war drums are cut; everything is scattered.

What the poem says

Ilakkuvaṉ's arrows destroy everything piece by piece: chariot floors, axles, bows, armoured chests, banners, royal parasols, warriors' crowns, and the drums kept to be beaten in victory.

The verse repeats the same verbs, 'is cut' and 'snaps', again and again, a figure the commentary names. It also notes that the verse begins with aṭi, 'foot' or 'base', and ends its list with muṭi, 'crown' or 'head', running from bottom to top.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭi aṟum tēr; muraṇ āḻi accu iṟum;
kaṭi neṭuñ cilai aṟum; kavaca mārpu iṟum;
koṭi aṟum; kuṭai aṟum; koṟṟa vīrartam
muṭi aṟum; muracu aṟum; muḻutum cintumāl.