கம்பராமாயணம் 854 · பால 13.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்ணம் மாத்திரமும் - நினைக்கவும் கூட; அரிது ஆம் - அரிதாகிய; இடை - இடையையும்; வண்ண மாத் துவர்வாய் - சிறந்த பவளம் போன்ற அழகிய வாயையும்; கனி வாய்ச்சியர் - கனிகளின் சுவை போன்ற இனிமையான சொற்களையுடைய மாதர்களின்; திண்ணம் ஆத்து - (வாரால்) உறுதியாகக் கட்டப்பெற்று; ஒளிர் - விளங்குகின்ற; செவ் இளநீர் - செவ்வு இளநீர் போன்ற தனங்களிலிருந்து; இழி சுண்ணம் - உதிர்ந்த நறுமணப் பொடிகளும்; ஆர்த்தன - எங்கும் நிறைந்தன; தூளியும் - (சேனையால் எழுப்பப்பட்ட) தூசியும் நிறைந்தன.
பெண்களின் நறுமணப் பொடியும் சேனைகள் எழுப்பிய புழுதியும் எங்கும் நிறைந்தன என்பது. சுண்ணம், தூளி இரண்டும் ஆர்த்தன என்ற ஒரு பொதுத் தன்மையைத் தனித்தனி பெற்று வந்தது - தொடர் முழுது உவமையணி. ஆத்து - யாத்து என்பதன் மரூஉ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the women whose waists can scarcely be imagined,
- whose lips are lovely red coral and whose words are sweet as fruit,
- the scented powder that fell from breasts like young red coconuts, firmly bound and gleaming,
- filled the air; and the dust filled it too.
What the poem says
Two things fill the air over the march: the fragrant powder that falls from the women's breasts, which are bound firmly in bodices and compared to tender red coconuts, and the dust kicked up by the army.
The poet sets the delicate and the gross side by side under a single verb.