கம்பராமாயணம் 8541 · யுத்த 21.54

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செம்பெருங் குருதியின் திகழ்ந்த; செங்கண் மீன்
கொம்போடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை ஆம் தொடையலார் தடக்கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன.

பொருள் · Meaning in Tamil

தும்பை அம் தொடையலர் தடக்கை - அழகிய தும்பை மாலையை அணிந்த அரக்க வீரர்களுடைய பெரிய கைகள்; தூணி வாங்கு அம்பொடும் துணிந்தன - அம்பறாத் தூணியி னின்றும் பற்றி எடுக்கும் அம்பினோடும் துணிக்கப்பட்டனவாகி; சிலையொடு அற்றன - (பற்றிய) வில்லுடன் அறுபட்டன; செங்கண் மீன் கொம்பொடும் - சிவந்த கண்களை உடைய மீன்கள் கொம்புடன்; பரவையில் திரியும் கொட்பு என - கடலிடை அலைந்து சுற்றும் தன்மைக்கு ஒப்பாக; செம்பெருங் குருதியின் திகழ்ந்த - செந்நிறம் வாய்ந்த குருதிப் பெருவெள்ளத்திலே விளங்கித் தோன்றின.

கொம்பு மீன், சுறாமுதலியன. இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி. “அதிரப்பொருவது தும்பை” என்ற தமிழர் போர் முறை இங்கு இந்திரசித்து இலக்குவர் ஆகியோர்க்கிடையில் வைத்து ஆசிரியரால் பேசப் பெறுகின்றது. “தும்பை அம்தொடையலர்” என்பது “தும்பை மலர் மாலையை அணிந்தவர்” என்னும் பொருளதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They shone in the great red flood of blood, like the circling
  2. of red-eyed horned fish roaming the sea:
  3. the great hands of those wearing lovely tumpai garlands, cut off along with the arrows
  4. they were drawing from their quivers, severed together with their bows.

What the poem says

The demons' hands are cut off still gripping the arrows they were drawing and the bows they held. Floating in the river of blood with bows and arrows sticking out, they look like red-eyed fish with horns, sharks and swordfish, circling in the sea.

The warriors wear garlands of tumpai flowers. In classical Tamil poetics, tumpai is the flower worn by those who fight a pitched battle, so the poet frames this fight in Tamil terms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cem peruṅ kurutiyiṉ tikaḻnta; ceṅ kaṇ mīṉ
kompoṭum paravaiyil tiriyum koṭpu eṉa
tumpai am toṭaiyalar taṭak kai tūṇi vāṅku
ampoṭum tuṇintaṉa cilaiyoṭu aṟṟaṉa.