கம்பராமாயணம் 8542 · யுத்த 21.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தடிவன கொடுஞ்சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
முடிவு அறு பெரும்பிணக் களத்தின் மொய்த்தன
படிவன ஒத்தன பறவை பன்மைய.
பொருள் · Meaning in Tamil
தடிவன கொடுஞ்சரம் தள்ள, தள்ளுற மடிவன - வெட்டி வீழ்த்தும் தன்மையனவாகிய கொடிய அம்புகள் வெட்டித் தள்ளுதலால் தள்ளப்பட்டு வீழ்ந்து கிடப்பனவாகிய; கொடிகளும் குடையும் மற்றவும் - கொடிகளும், குடைகளும் ஏனையவும்; வெடிபடு பெரும்பிணக் களத்தில் மொய்த்தன - அச்சந்தரத்தக்க பெரும்பிணக் குவியலையுடைய போர்க்களத்திலே நெருங்கியுள்ளவை; படிவனபான்மையா பறவை ஒத்தன - (பிணங்களை உண்ணுதற்கு) பறவைகள் பலவாகப் படியும் தன்மையினை ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Struck down by the cruel cutting arrows, falling and folding,
- the banners, parasols and other things
- that crowded on the dreadful battlefield of great corpses
- looked like birds settling there.
What the poem says
Banners, parasols and other gear shot down by the arrows lie crumpled all over the field among the heaps of corpses.
From a distance they look like flocks of carrion birds that have landed to feed on the dead.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṭivaṉa koṭuñ caram taḷḷa taḷḷuṟa
maṭivaṉa koṭikaḷum kuṭaiyum maṟṟavum
veṭi paṭu perum piṇak kaḷattil moyttaṉa
paṭivaṉa ottaṉa paṟavaip pāṉmaiyā.