கம்பராமாயணம் 8546 · யுத்த 21.59

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆன காலையில் இராமனும் அனுமனைத் தூண்டி - அப்பொழுது இராமபிரானும் (தன்னைத் தாங்கியுள்ள) அநுமனை (இந்திரசித்தன் முன்னர்ச் செல்லுமாறு செலுத்தி; அயில்முகப் பகழி சோனை மாரியிற் சொரிந்தனன் - கூரிய முனையுடன் கூடிய அம்புகளை விடாப்பெருமழை போற் சொரிந்தான்; (அதனால் தேர் எலாம் வானமானங்கள் மறிந்தென மடிய - அரக்கர்களுடைய தேர்களெல்லாம், வான்வழியே செல்லும் விமானங்கள், குப்புற வீழ்ந்தாற் போன்று சிதைந்து வீழ்ந்தமையால்; இராவணன் தனயன் தானும் தேருமே ஆயினன் - இராவணன் மைந்தனாகிய இந்திர சித்து தானும் தன்னுடைய தேருமேயாகத் தனிப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time Irāmaṉ too, urging Aṉumaṉ on,
  2. poured sharp-pointed arrows like a ceaseless downpour;
  3. all the chariots perished as if the sky-cars of the gods had overturned,
  4. and Irāvaṇaṉ's son was left as nothing but himself and his chariot.

What the poem says

Irāmaṉ now joins in. He urges Aṉumaṉ forward and pours out arrows like an unending monsoon.

The demon chariots crash down like flying celestial cars tumbling from the sky. When it is over, Intiracittu stands alone: only he and his own chariot are left.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉa kālaiyil, irāmaṉum, ayil mukap pakaḻi
cōṉai māriyiṉ corintaṉaṉ, aṉumaṉait tūṇṭi;
vāṉa māṉaṅkaḷ maṟinteṉat tēr elām maṭiya,
tāṉum tērumē āyiṉaṉ, irāvaṇaṉ taṉayaṉ.