கம்பராமாயணம் 8548 · யுத்த 21.61

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்,
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது 'ஒன்று' எனச் சலித்தான்.

பொருள் · Meaning in Tamil

இருவிர் என்னொடு பொருதிரோ? - (இராம இலக்குவராகிய) நீங்கள் இருவரும் (ஒருசேர இயைந்து) என்னுடன் போர் செய்கின்றீர்களா? அன்று எனின் ஏற்ற ஒருவிர் வந்து உயிர்தருதிரோ? - அன்றேல் (ஒருவிர் ஒருவிராய்த் தனித்து) வந்து உயிரைத் தருகின்றீர்களா? உம்படையொடும் பொருது பொன்றுதல் புரிதிரோ? - (அல்லது) நுமக்குரிய (வானரச் சேனைகளோடும் கூடி (என்னுடன்) போர் செய்து இறந்தொழிதலைச் செய்கின்றீர்களா? உறுவது புகலும் - (இவற்றுள் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும்) பொருந்துவது ஒன்றைச் சொல்வீராக; தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான் எனச் சலித்தான் - நுமக்கு ஏற்புடையதொன்றை இன்று யான் தருகின்றேன் எனச் சிதைந்து கூறினான் (இந்திரசித்து).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Will you two fight me together? If not, will each of you
  2. come singly and give up your life? Or will you fight
  3. along with your army and perish? Say which suits you;
  4. I will give you today whatever fits you,' he said in scorn.

What the poem says

Intiracittu offers the brothers a sneering choice. They can fight him together, come one at a time and die, or bring their whole army and be wiped out with it.

Whichever they pick, he says, he will give them exactly what they deserve.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruvir eṉṉoṭu porutirō? aṉṟueṉiṉ, ēṟṟa
oruvir vantu uyir tarutirō? um paṭaiyōṭum
porutu poṉṟutal puritirō? uṟuvatu pukalum,
taruval, iṉṟu umakku ēṟṟuḷatu yāṉ' eṉac calittāṉ.