கம்பராமாயணம் 8549 · யுத்த 21.62

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வாளின், திண் சிலைத் தொழிலின், மல்லினின், மற்றை
ஆள் உற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில்
கோள் உற்று உன்னொடு குறித்தது செய்து, உயிர்கொள்வான்
சூள் உற்றேன்; இது சரதம் 'என்று, இலக்குவன் சொன்னான்

பொருள் · Meaning in Tamil

“வாளின், திண்சிலைத் தொழிலினின் மல்லினின் - “வாள் கொண்டும், உறுதியான வில்லினாலும், மற்போர் புரிந்தும்; மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் - ஏனைய ஆளுதல் பொருந்தி எண்ணப்பட்ட போர்க்கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில் கோளுற்று - போரில் வலிமையை மேற்கொண்டு; உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் சூளுற்றேன் - உன் நேர் நின்று, போர் புரிந்து உன் உயிரைக் கொள்ளும் பொருட்டு வஞ்சினம் கூறினன்; இது சரதம் என்று, இலக்குவன் சொன்னான் - இது உறுதி என (இந்திரசித்தனை நோக்கி) இலக்குவன் மறுமொழி கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the sword, with the art of the strong bow, with wrestling, or with
  2. any other weapon men wield and reckon in war,
  3. I have sworn to grapple with you, aim at you in battle,
  4. fight, and take your life; this is certain,' said Ilakkuvaṉ.

What the poem says

Ilakkuvaṉ answers the challenge. Whatever the weapon, sword, bow, bare-handed wrestling or anything else warriors use, he has sworn to meet Intiracittu face to face and kill him.

'This is certain,' he says, recalling the vow he made earlier before Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāḷiṉ, tiṇ cilait toḻiliṉiṉ, malliṉiṉ, maṟṟai
āḷuṟṟu eṇṇiya paṭaikkalam evaṟṟiṉum amaril
kōḷuṟṟu uṉṉoṭu kuṟittu, amar ceytu, uyir koḷvāṉ
cūḷuṟṟēṉ; itu caratam 'eṉṟu, ilakkuvaṉ coṉṉāṉ