கம்பராமாயணம் 8551 · யுத்த 21.64

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1இலக்குவன் எனும்பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன்கணைக்கு ஆக்குவென்; "இதுபுகுந்து இடையே
விலக்குவன் '' என, விடையவன் விலக்கினும், வீரம்
விலக்குவன்; இதுகாணும், உன் தமையனும் விழியால்.

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன - இலக்குவன் எனும் பெயர் உனக்குத் தக்கதே என்று (யாவரும்) கருதுமாறு; வன் கணைக்கு இலக்கு ஆக்குவென் - (உன்னை என்னுடைய) வலிய அம்பினுக்கு இலக்கு ஆக்குவென்; “இது புகுந்து இடையே விலக்குவன்” என விடையவன் விலக்கினும் - (யான் செய்யும்) “இப்போரினை விலக்குவேன்” எனக் கூறி எருதினை வாகனமாக உடைய உருத்திர மூர்த்தியே இடையிற் புகுந்து (பொருது) விலக்கினாலும்; வீரம் கலக்குவன் - (அவருடைய அத்தகைய) வீரத்தைத் தடுத்து நீக்குவேன்; உன் தமையனும் கண்ணால் இது காணும் - இதனை (உனது அழிவினை) உன் அண்ணனான இராமனும் (செயலற்று) கண்களாற் காண்பான்.

இது முதல் மூன்று செய்யுட்கள் ஒரு தொடராய் அமைந்தன. “லக்ஷ்மண” எனும் வட மொழிச் சொல்லின் திரிபு இலக்குவன் என்பது. இத்திரிபினையே முதன்மையாகக் கொண்டு இந்திரசித்தின் அம்பினுக்கு இலக்கு ஆகுபவன் இலக்குவன் என்று பொருள் கொள்ளும்படி இருக்கும் நயம் உணர்ந்து மகிழத் தக்கது. இச்செய்யுள் முன்னிரண்டடி ஒரு வகையாகவும், பின்னிரண்டடி ஒரு வகையாகவும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that men will say the name Ilakkuvaṉ suits you well,
  2. I will make you the target of my strong arrows; even if the one who rides the bull
  3. steps in between, saying "I will stop this," and holds me back,
  4. I will shatter his valour; and your elder brother will watch it with his own eyes.

What the poem says

Intiracittu continues, punning on Ilakkuvaṉ's name: ilakku means 'target', so he will make Ilakkuvaṉ live up to his name by turning him into a target for his arrows. The name Ilakkuvaṉ is the Tamil form of Sanskrit Lakṣmaṇa.

Even if Śiva, who rides the bull, came between them to stop the fight, Intiracittu boasts that he would break Śiva's valour too, while Irāmaṉ looks on helplessly. The commentary notes that this verse begins a run of three connected verses, and that its first and second halves are built in different patterns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilakkuvaṉ eṉum peyar uṉakku iyaivatē eṉṉa
ilakku vaṉ kaṇaikku ākkuveṉ; "itu pukuntu iṭaiyē
vilakkuvaṉ '' eṉa, viṭaiyavaṉ vilakkiṉum, vīram
kalakkuvaṉ; itu kāṇum, uṉ tamaiyaṉum kaṇṇāl.