கம்பராமாயணம் 8556 · யுத்த 21.69

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராவணன் சிறுவன் அங்கதன் தன்மேல் ஆயிரம் - இராவணன் மகனான இந்திரசித்து அங்கதன் மீது ஆயிரம் அம்புகளையும், வெங்கண் மாருதி மேனிமேல் அவற்றினுக்கு இரட்டி - (சினத்தால்) வெம்மை மிக்க கண்களையுடைய வாயுவின் மகனான அனுமன் மேனியின் மேல் அவற்றுக்கு இருமடங்கு (ஈராயிரம்) அம்புகளையும், வேறு உளவீரச் சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பில செலுத்தி - அவர்களின் வேறாக உள்ள சிங்க ஏற்றினை ஒத்தவர்களாகிய வீரர்களின் உடம்பின்மேல் கணக்கிட முடியாத அம்புகளையும் செலுத்தி; எங்கும் வெங்கணை ஆக்கினன் - போர்க்களமெங்கும் (தன்னுடைய) கொடிய அம்புகளே நிரம்பும்படி செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand on Aṅkataṉ; twice as many as those
  2. on the body of fierce-eyed Māruti; and on the bodies of the other
  3. lion-like warriors he sent arrows without end;
  4. Irāvaṇaṉ's son made the whole field nothing but fierce arrows.

What the poem says

Intiracittu aims first at the monkeys carrying the two brothers: a thousand arrows into Aṅkataṉ and two thousand into Aṉumaṉ.

He sends countless more into the other monkey champions, until the whole battlefield is full of his arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkataṉtaṉmēl āyiram; avaṟṟiṉukku iraṭṭi,
veṅ kaṇ māruti mēṉimēl; vēṟu uḷa vīrac
ciṅkam aṉṉavar ākkaimēl ulappu ila celutti,
eṅkum veṅ kaṇai ākkiṉaṉ irāvaṇaṉ ciṟuvaṉ.