கம்பராமாயணம் 8557 · யுத்த 21.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராவணி - இராவணன் மகனான இந்திரசித்து; இளைய மைந்தன் மேல் இராமன் மேல் - இளையோனாகிய இலக்குவன் மீதும் இராமன் மீதும்; வன்தொழில் விளையும் வானர வீரர் மேல் - வலிய போர்த்தொழிலை விளைவிக்கின்ற வானர வீரர்கள் மீதும்; இகலி - மாறுபாடு கொண்டு; மெய்யுற்று உளையும் வெஞ்சரம் சொரிந்தனன் - அவர்தம் உடம்புகளில் தைத்து வருத்தும் வண்ணம் வெம்மையுடைய அம்புகளை (மழை போல் மிகுதியாகச்) சொரிந்தான்; அவ்வரிவில் - அவ்விந்திரசித்தனுடைய கட்டமைந்த வில்லானது; வளையும் மண்டலப் பிறை என - வளைந்து தோன்றுகின்ற வான மண்டலத்திலுள்ள பிறைச் சந்திரன் போல; நாழிகை ஒன்று நின்றது - ஒரு நாழிகை அளவு (அம்புகளைத் தொடர்ந்து எய்யும் தொழிலில் நிலைத்து) நின்றது.
வடமொழியில் தசரதன் மைந்தன் தாசரதி என்றாற்போலத் தமிழிலும் இராவணன் மகன் இராவணி என வருமாறு புதிய வழக்கினைப் புகுத்தினார். நாழிகை - 24 நிமிடங்கள். 2½ நாழிகை ஒரு மணி நேரமாம். வளைத்த வில் நிமிரும் முன்னமே வேறொரு அம்பினை அதன் கண்பூட்டி விடுதலால் வில் வளைந்தே காணப்பெற்றதாம். இங்ஙனம் ஒரு நாழிகை நேரம் வில் வளைந்தே நின்றது என்றமையால் ஒரு தடவை வளைக்கப்பட்ட வில் நீண்ட நேரம் கணை எய்யப் பயன் பட்ட பாங்கு புலப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the younger prince, on Irāmaṉ, Irāvaṇi in his hostility,
- and on the monkey heroes who work mighty deeds, poured fierce arrows
- that sank into their bodies and tormented them; for one nāḻikai
- that banded bow stood bent like the crescent moon in the sky's round.
What the poem says
Intiracittu, here called Irāvaṇi, 'son of Irāvaṇaṉ', a Tamil coinage modelled on Sanskrit names like Dāśarathi for Tacarataṉ's son, rains arrows on Ilakkuvaṉ, Irāmaṉ and the monkey heroes.
He shoots so fast that for a whole nāḻikai, about twenty-four minutes, his bow never straightens. Each new arrow is on the string before the bow can spring back, so it stays curved like a crescent moon.