கம்பராமாயணம் 8558 · யுத்த 21.71

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பச்சி மத்தினும், முகத்தினும், மருங்கினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைக்கணைக் கடுந்தொழில் காண
அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர்.

பொருள் · Meaning in Tamil

கச்சமுற்றவன் - (போர் ஆடையை இறுகக் கட்டிப் போர் செய்பவனாகிய இந்திரசித்து; உச்சி முற்றிய வெய்யவன் கதிரென - உச்சிப் பொழுதில் முற்றிய வெம்மை உடையவன் ஆன சூரியனுடைய கதிர்களைப் போன்று; பச்சிமத்தினும் முகத்தினும் மருங்கினும் பகழி உமிழ - (இராம இலக்குவர் முதலானோரின்) மேற்புறத்தும், முகத்திலும் இரு பக்கங்களினும் அம்புகளைச் செலுத்த; கைக்கணைக் கடுந்தொழில் காண - (அங்ஙனம் செலுத்தப் பெற்று (அவனது) கையின் கணிருந்து புறப்பட்ட அம்புகளின் கொடுந்தொழிலைக் காணுதற்கு; அமரர் அச்சம் உற்றனர் கண் புதைத்து ஒடுங்கினர் - தேவர்கள் அச்சமுற்றவர்களாய்க் கண்களைக் (கைகளாற்) பொத்தி மூடிக்கொண்டு ஒடுங்கி நடுக்கமுற்றார்கள்.

கச்சம் - ஆடை. கச்சம் உறுதல் - ஆடையை இறுக உடுத்தல், பச்சிமம் - மேற்றிசை இங்கு மேற்புறம் என்ற பொருளில் வந்தது. முகம் - முன்புறம். மருங்கு - இரு பக்கம். முற்றுதல் - முதிர்தல், பகைவரை எல்லாப் பக்கங்களிலும் கொடுமையும், கடுமையுமுடைய அம்புகளால் இந்திரசித்து வாட்டினான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he spat arrows at their backs, their sides and their faces,
  2. like the rays of the blazing sun at its fullest at noon,
  3. the immortals, seeing the fierceness of the two hands of the one with his garment girt tight,
  4. were seized with fear, covered their eyes and shrank away.

What the poem says

Intiracittu, his clothes girded tight for battle, shoots arrows at his enemies from behind, in front and from both sides, like the rays of the midday sun when its heat is fiercest.

The gods watching from above are so frightened by the fury of his hands that they cover their eyes and cower.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paccimattiṉum, maruṅkiṉum, mukattiṉum, pakaḻi,
ucci muṟṟiya veyyavaṉ katir eṉa umiḻa,
kaccam uṟṟavaṉ kait tuṇaik kaṭumaiyaik kāṇā
accam uṟṟaṉar, kaṇ putaittu oṭuṅkiṉar, amarar.