கம்பராமாயணம் 8559 · யுத்த 21.72

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினன், கடிதினில் புக்கான்.

பொருள் · Meaning in Tamil

ஐயற்கு ஆங்கு இளங்கோளரி கடிதினின் புக்கான் - தலைவனாகிய இராமனுக்கு இளைய வலிய சிங்கம் போன்றவனாகிய இலக்குவன், விரைந்து போர் செய்ய முற்பட்டவனாகி; மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி - தன் உடலில் பட்டனவாகிய அம்புகள் தைத்துத் தோன்ற, தைக்கப் பெறாதனவாகிய அம்புகள் அனைத்தையும் (தனது அம்புகளால்) தடுத்து நீக்கி; தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி - (இந்திரசித்தன் ஏவிய) தெய்வத்தன்மையுள்ள அம்புகளுக்கு அந்தந்த அம்புகளின் எண்ணிக்கைக்குத் தக அவ்வவற்றைச் செலுத்தி; அறிவிலான் அறைந்த பொய்யின் போம்படி போக்கினான் - (அவ்வம்புகள் அனைத்தையும்) அறிவில்லாதவன் கூறிய பொய்மொழிகளை ஒத்து விரைவில் அழிந்தொழியுமாறு விலக்கிப் போக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Letting those that struck his body strike, and warding off all those that did not,
  2. sending against the divine war arrows just as many of his own, arrow for arrow,
  3. the young lion, brother to the lord, made them vanish
  4. like lies spoken by a fool, and swiftly pressed in.

What the poem says

Ilakkuvaṉ, the young lion and Irāmaṉ's brother, takes the arrows that have already hit him and blocks all the rest, matching Intiracittu's divine arrows one for one with his own.

The enemy's shafts vanish as quickly as the lies of a fool, and Ilakkuvaṉ presses forward to attack.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1meyyil paṭṭaṉa paṭa, paṭātaṉa elām vilakki,
teyvap pōrk kaṇaikku attuṇaikku attuṇaic celutti,
aiyaṟku āṅku iḷaṅ kōḷari, aṟivu ilāṉ aṟainta
poyyiṉ pōmpaṭi ākkiṉaṉ, kaṭitiṉiṉ pukkāṉ.