கம்பராமாயணம் 8560 · யுத்த 21.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெருந்தகை - பெருந்தகைமையை உடையவனாகிய இராமன்; இது அறன்று என - (இலக்குவனும், இந்திரசித்தும் தனித்து நின்று பெரும்போரில் தான் இடையே புகுந்து அம்பு தொடுத்தல்) போர் அறம் ஆகாதென எண்ணி; அரக்கன் மேல் சரம் துரந்து அருளான் - அரக்கனாகிய இந்திரசித்தன் மேல் அம்பு தொடுக்காதவனாக; இளவலைப் பிரியான் பிறகின் நின்றனன் - இலக்குவனைப் பிரியாதவனாய் அவன் பின்புறத்திலேயே வாளா நின்றான்; இருவரும் ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர் - (இலக்குவன் இந்திரசித்து என்னும்) இருவரும், ஒருவரை ஒருவர் (வெற்றியினால்) மேம்படுவதை (யாரும்) பார்த்தாரில்லை; விசிகம் விசும்பிடைச் செறிந்தன விறகின் வெந்தன - (அவ்விருவராலும் எய்யப்பட்டனவாய்) வானிடத்தே நெருங்கிய அம்புகள் (தீயிடைப்பட்ட) விறகினையொத்து வெந்து சாம்பராயின.
இறத்தல் - கடத்தல், ஒருவரை ஒருவர் விஞ்சுதல், மேம்படல். பிறகு - பின்புறம், இறவு - “வு” விகுதி பெற்ற தொழிற்பெயர் வெந்தன - வெந்தது என, விசிகம் - அம்பு. இலக்குவன் இந்திரசித்து எனுமிருவர் வஞ்சினங் கூறிப் போர் புரிகையில் தான் இடையிற் புகுந்து அம்பு தொடுத்தல் அறமன்று என எண்ணி இராமன் வாளா நின்றான் என்பதாம். வாலி வதத்தில் பிறிதொரு காரணம் பற்றி இவ்வாறு எண்ணாமல் இராமன் அம்பு எய்தனன் என்பதை நினைவு கூர்க. சூழல் நோக்கிச் செய்யுள் மாற்றம் ஏற்படும் என்பதை உணர முடிகிறது. இலக்குவன் இந்திரசித்தன் இருவரில் யார் மேம்பட்டவர் எனக் கூறுதற்கியலாதவாறு சமமாகப் பொருதனர் என்பதனை, “இருவரும் ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர்” என்பதனாற் குறித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one stood behind, never leaving his younger brother;
- thinking 'This is not right,' he graciously shot no arrow at the demon;
- neither of the two saw the other surpass him;
- the arrows crowded in the sky and burned up like firewood.
What the poem says
Irāmaṉ stays close behind his brother but does not shoot at Intiracittu. Since the two have sworn to fight each other one to one, he thinks it would be against the rules of war to join in.
The commentary contrasts this with the killing of Vālī, when Irāmaṉ, for other reasons, did shoot into a fight between two others. The duel is perfectly even: neither gets the better of the other, and their arrows collide in the sky and burn up like firewood.