கம்பராமாயணம் 8562 · யுத்த 21.75

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படம் கொள் பாம்பு அணை துறந்தவற்கு இளையவன் - படத்தினைக் கொண்ட (ஆதிசேடன் என்ற) பாம்புப் படுக்கையை விட்டு (தசரதன் மகனாக) அவதரித்த (திருமாலாகிய) இராமனுடைய தம்பி இலக்குவன்; வெள்ளத்தின் மேலன வருவன - வெள்ளத்தினும் அதிகமாக வருவனவாகிய, விடம் கொள் பகழி விலக்கி - விடத்தைத் தன்னிடம் கொண்ட அம்புகளைத் தடுத்து; எறுழ் வலி அரக்கன் தேர் - மிக்க வலிமையுடைய அரக்கனாகிய இந்திரசித்தன் தேரினை; இடங்கர் ஏறு என ஈர்க்கும் - (குருதி வெள்ளத்தில்) ஆண் முதலையினை ஒத்து இழுத்துச் செல்லும்; மடங்கல் ஐ இருநூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான் - சிங்கங்கள் ஆயிரத்தையும் கூற்றுவன் வாயுட் புகுமாறு கொன்றொழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The younger brother of the one who left his bed, the hooded serpent,
  2. warding off the poisoned arrows that came on more than a flood,
  3. fed into the mouth of Death all the lions, five times two hundred,
  4. that drew, like bull crocodiles, the chariot of the demon of mighty strength.

What the poem says

Ilakkuvaṉ blocks Intiracittu's poisoned arrows, which come at him thicker than a flood, and then kills all thousand lions that pull the demon's chariot. They had been dragging it through the river of blood like bull crocodiles.

Irāmaṉ is described as the one who left his serpent bed, a reminder that he is Viṣṇu, who rests on the cosmic serpent Ādiśeṣa and was born on earth as Tacarataṉ's son.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭam koḷ pāmpu aṇai tuṟantavaṟku iḷaiyavaṉ, pakaḻi,
viṭam koḷ veḷḷattiṉmēlaṉa varuvaṉa vilakki
iṭaṅkarēṟu aṉa, eṟuḻ vali arakkaṉ tēr īrkkum
maṭaṅkal ai iru nūṟṟaiyum kūṟṟiṉvāy maṭuttāṉ