கம்பராமாயணம் 8565 · யுத்த 21.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிங்க ஏறு அன்ன இலக்குவன் - ஆண் சிங்கத்தினை ஒத்த இலக்குவன்; சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த - (வெற்றிச்) சங்கினை ஊதிய இராவணனின் ஒப்பற்ற மகனாகிய இந்திர சித்து அணிந்திருந்த; கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல - வீர கங்கணத்துடன் (மார்பிலணிந்த) கவசமும் மூட்டுவாய் விண்டு கழலும்படி; வெங்கடுங்கணை ஐ இரண்டு உரும் என வீசி - வெம்மையும் விரைவும் வாய்ந்த அம்புகள் பத்தினை இடியேறு என்னும்படி எய்து; சிலையை நாண் எறிந்தான் - தன் வில்லின் நாணைத் தெறித்துப் பேரொலி எழச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the bracelet and the armour worn by the peerless son of the Ten-faced one,
- who had blown the conch, came apart at the joints and fell away,
- Ilakkuvaṉ, like a lion king, loosed ten fierce swift arrows like thunderbolts,
- and twanged the string of his bow.
What the poem says
Ilakkuvaṉ answers the conch. He shoots ten arrows that strike like thunderbolts, splitting the seams of Intiracittu's armour and knocking off his warrior's bracelet, so that both fall away.
Then he twangs his bowstring in defiance. Irāvaṇaṉ is called 'the Ten-faced one' for his ten heads.