கம்பராமாயணம் 8566 · யுத்த 21.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ட கார் முகில் வண்ணனும் கமலக்கண் கலுழ - (தம்பியின் போர் வன்மையைக்) கண்ட கருமுகில் வண்ணனாகிய இராமனும், செந்தாமரை போலும் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்த; துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற - துண்டமாகிய வெள்ளிய பிறைச் சந்திரனது நிலவினைப் போன்று (தன் முகத்தில்) புன்சிரிப்பின் ஒளி தோன்ற; அண்டம் உண்ட தன் வாயினால் “ஆர்மின்” என்று அருள - அண்டத்தை உண்ட தன் வாயினால் (நம் படை வீரர் அனைவரும்) “ஆரவாரம் செய்வீர்களாக” எனப் பணித்தருள; விண்டது அண்டம் என்று உலைந்திட வீரர் ஆர்த்தனர் - “இவ்வண்டம் பிளவுற்றது” என்று உலகத்தார் நடுங்கும்படியாக (வானர வீரர்கள் (பேரொலியுண்டாக வாய் விட்டு) ஆரவாரித்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing it, the one with the colour of a dark rain cloud, his lotus eyes overflowing,
- a smile showing like the light of the white crescent moon,
- graciously said with the mouth that once swallowed the universe, 'Shout!';
- and the warriors roared, so that men trembled, saying 'The cosmos has split!'
What the poem says
Watching his brother, Irāmaṉ weeps tears of joy, and a smile bright as the crescent moon lights his face.
He tells the monkey warriors to raise a victory shout, and they roar so loudly that people fear the universe has cracked open. His mouth is the one that 'swallowed the universe', an allusion to Viṣṇu, who in myth swallowed the worlds to keep them safe during the cosmic flood.