கம்பராமாயணம் 8567 · யுத்த 21.80

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண் இமைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல்; மற்று அவன் ஆக்கை கண்டு அறிகிலன்; ஆழிப்
பண்ணவற்கு, 'இவன் பிழைக்குமேல், படுக்கும் நம்படையை;
எண்ணம் மற்று இலை; அயன் படை தொடுப்பல் 'என்று இசைத்தான்.

பொருள் · Meaning in Tamil

கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான் - (அப்பொழுது இந்திரசித்து) கண்ணிமைக்கும் நேரமாகிய நொடிப் பொழுதிற்கு முன்பே விரைந்து சென்று ஆகாயத்தில் மறைந்தான்; அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் - (அதனை உணர்ந்த) பெருமை சான்றவனாகிய இலக்குவன், அவ்விந்திரசித்தின் உடம்பினைக் கண்டறிய இயலாதவனாய்; இவன் பிழைக்கு மேல் நம் படையைப் படுக்கும் - இவ்விந்திரசித்து இவ்விடத்தை விட்டு இப்பொழுது தப்பிப் பிழைப்பானாயின் நம் சேனைகளை அழித்தொழிப்பான்; எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பல் என்று ஆழிப்பண்ணவற்கு இசைத்தான் - (எனவே) இப்பொழுது சிந்தித்துச் செய்தக்க செயல் வேறில்லை, பிரமாத்திரத்தை (இவன் மேல் இப்பொழுதே தொடுப்பேன் எனச் சக்கரப்படையோனாகிய திருமாலின் அமிசமாகிய இராமனுக்கு எடுத்துக் கூறினான்.

கண் இமைப்பதன் முன்பு - ஒரு மாத்திரை அளவு காலத்திற்கு முன்பே. அண்ணல் - பெருமை சான்ற குணங்களையுடைய இலக்குவன், பண்ணவன் - தேவன், இங்கு இராமனைக் குறித்தது. வேறு முயற்சிகளைச் செய்து புதிய பலத்தோடு வருவதன் முன் இப்பொழுதே இந்திரசித்தனை அழித்தல் நல்லதென்கின்றான் இலக்குவன். நிகழப் போவதை முன் கூட்டியே இராமனுக்கு இலக்குவன் அறிவிக்கும் இடங்களில் இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before an eye could blink he went and vanished into the sky;
  2. the noble one, unable to see that man's body anywhere,
  3. said to the divine one: 'If he escapes, he will slaughter our army;
  4. there is no other way; I will loose the weapon of Brahmā.'

What the poem says

Faster than a blink, Intiracittu disappears into the sky. Ilakkuvaṉ cannot see him anywhere.

Fearing that if Intiracittu gets away he will come back with new strength and slaughter their army, Ilakkuvaṉ tells Irāmaṉ that nothing else will do: he will use the Brahmā weapon, the most terrible weapon in the epic, which gives this episode its name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇ imaippataṉ muṉpu pōy vicumpiṭaik karantāṉ;
aṇṇal, maṟṟavaṉ ākkai kaṇṭaṟikilaṉ āki,
paṇṇavaṟku, 'ivaṉ piḻaikkumēl, paṭukkum nam paṭaiyai;
eṇṇammaṟṟu ilai; ayaṉ paṭai toṭuppeṉ 'eṉṟu icaittāṉ.