கம்பராமாயணம் 8568 · யுத்த 21.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆன்றவன் அது பகர்தலும் - (குணங்களால்) நிறைந்தவனாகிய இலக்குவன் அவ்வாறு கூறிய அளவில்; சான்றவன் - (எவ்வுயிர்க்கும்) சாட்சியாய் விளங்கும் இறைவனாகிய இராமன்; “அறநிலை வழாதாய்!” - (தன் தம்பியை நோக்கி) அற நெறியின் நிற்பதினின்றும் வழுவாது ஒழுகுபவனே! ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் - (நீ கூறிய வண்ணம்) உலகினைப் படைத்த வேதியனாகிய பிரமனது படைக்கலத்தைத் தொடுத்து எய்தனை என்றால்; ஒருவனால் முடிகிலது, இவ்வுலகம் மூன்றையும் சுடும் என்றான் - (அப்பிரமாத்திரம்) அவ்விந்திரசித்துவாகிய ஒருவனை மட்டும் அழிப்பதோடு நில்லாமல் (மேல், கீழ், நடு என்னும்) இவ்வுலகங்கள் மூன்றினையும் ஒரு சேரச் சுட்டழிக்கும் என அறிவுறுத்தினான்; உணர்வுடைத் தம்பி அது தவிர்ந்தனன் - (அதனைக் கேட்ட) நல்லுணர்வுடைய தம்பியாகிய இலக்குவன் (பிரம்மாத்திரம் தொடுத்தலாகிய) அச்செயலைச் செய்யா தொழிந்தான். ஆன்றவன் - (அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் முதலான குணங்களால்) நிறைந்தவன். சான்றவன் - சாட்சியாய் நிற்கும் இறைவன் - இங்கு இராமனைக் குறித்தது. உணர்வுடைத் தம்பி - தானே உணரவல்ல அறிவுடைத்தம்பி. இலக்குவன் இங்கு,
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the worthy one said this, 'You who never stray from the path of right,
- if you loose the weapon of the Brahmin who begot the world, it will burn
- all three worlds; it will not end with one man,' said
- the Witness; and the understanding younger brother gave it up.
What the poem says
Irāmaṉ, called 'the Witness', the god who watches over every living being, stops him. If the Brahmā weapon is fired, he says, it will not stop at killing one demon; it will burn up all three worlds, heaven, earth and the underworld.
Ilakkuvaṉ, wise enough to see the point at once, lets the idea go.