கம்பராமாயணம் 8570 · யுத்த 21.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செஞ்சரத்தொடு செம்மழை விசும்பிடைச் செல்ல - செம்மை வாய்ந்த (இலக்குவனது) அம்புடன் கூடிய செம்மேகம் வானத்தின் கண்ணே செல்ல; மஞ்சின் மாமழை போயினது ஆம் என மறைய - (அங்குள்ள கரிய நிறமுடைய) மழைமேகம் (அவ்விடத்தை விட்டு) அகன்று சென்றது என்னுமாறு (கருநிறமுடை இந்திரசித்து) அவ்விடத்தினின்றும் மறைந்துவிட; அஞ்சினன் அகன்றான் என அறிந்தனர் வானர வீரர் - இந்திரசித்து பொருதற்கு அஞ்சியவனாய் போர்க்களத்தை விட்டு ஓடினான் என்பதனை அறிந்தவர்களாகிய வானரவீரர்கள்; வெஞ்சினம் தருகளிப்பினர் ஆர்த்தார் - மிகுந்த சினமும் அதன் பயனாகிய வெற்றிக்களிப்பும் உடையவர்களாய் ஆரவாரித்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the red cloud moved off through the sky with the red arrows,
- and he was gone, like a great dark rain cloud that has passed away,
- the monkey warriors, taking it that 'He has fled in fear,'
- roared, full of fierce wrath and the joy of victory.
What the poem says
Intiracittu, dark as a rain cloud, has vanished, and the red glow of battle drifts off across the sky with the arrows.
The monkeys conclude that he has run away in fear. Still angry, but now flushed with victory, they roar in triumph.