கம்பராமாயணம் 8571 · யுத்த 21.84

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைத்து, ஆர்த்து, எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது, தோற்றவன், யாவர்க்கும் தோற்றான்
கடந்த வேலைபோல், கலங்குறும் இலங்கையைக் கலந்தான்

பொருள் · Meaning in Tamil

உடைந்த வானரச் சேனையும் - (முன் இந்திரசித்தனின் சங்க முழக்கங் கேட்டு அஞ்சி) தோற்றுப் பிரிந்து பின்னடைந்த வானர சேனையும்; ஓதநீர் உவரி அடைந்தது ஆம் என - கடலினின்றும் புறத்தே சென்ற ஓதமாகிய நீர் மீண்டும் கடலைச் சேர்ந்தாற் போன்று; இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடித் தொடர்ந்து சென்றது - (திரும்பி வந்து) பேரிரைச்சலுடன் ஆரவாரித்து எழுந்து கூத்தாடி (ஏனைய வானர சேனையுடன் தொடர்ந்து சென்றது; தோற்றவன் யாவர்க்கும் தோற்றான் - தோல்வியுற்றவனாகிய இந்திரசித்து, யாவர் கண்ணுக்கும் புலப்படாதவனாகி, கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கலந்தான் - (முன்னம் மந்தர மலையால்) கடையப்பெற்ற கடலைப் போலக் (பகைவர் தாக்குதலால்) கலங்கிய இலங்கை மாநகரைச் சேர்ந்தான்.

தோற்றவனாகிய இந்திரசித்து எவருக்கும் தோற்றாதவனாய் ஒளிந்தான் என்பது கதைப் பொருள் என்னும் தோற்றவன் (ஆகிய இந்திரசித்து) வானர சேனைக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் தோற்றான் (தோல்வியுற்றான்) என்று எண்ணுமாறு தோற்றவன் யாவருக்கும் தோற்றான் என்ற சொல்லமைதியின் நயம் காண்க. இது டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் கண்ட நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The monkey army that had broken also came back, like the tide
  2. returning to the briny sea, roaring, shouting, leaping up and dancing,
  3. and followed on; and the beaten one, unseen by all,
  4. slipped into Ilaṅkai, which was churned up like the churned ocean.

What the poem says

The monkeys who had fled earlier come rushing back like a tide returning to the sea, shouting and dancing.

Meanwhile Intiracittu, invisible, slips back into Ilaṅkai, a city as turbulent as the ocean when the gods churned it with Mount Mantara. The commentary points out a pun: tōṟṟāṉ means both 'was not seen' and 'was defeated', so the line says both that he went unseen by all and that he had been beaten in everyone's eyes. The commentary credits this reading to a modern scholar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭainta vāṉarac cēṉaiyum, ōta nīr uvari
aṭaintatu ām eṉa vantu, iraittu, ārttu, eḻuntu āṭi
toṭarntu ceṉṟatu, tōṟṟavaṉ, yāvarkkum tōṟṟāṉ
kaṭainta vēlaipōl, kalaṅkuṟum ilaṅkaiyil kalantāṉ