கம்பராமாயணம் 8572 · யுத்த 21.85

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்மேல் விடாமுன்
முற்கொள்வேன்' எனு முயற்சியன், மறைமுறை மொழிந்த
சொல்கொள் வேள்வி போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அவன் திறம் மறந்தார்.

பொருள் · Meaning in Tamil

இவர் எல்கொள் நான்முகன் படைக்கலம் என்மேல் விடாமுன் - (இராம இலக்குவராகிய) இவர்கள் ஒளி பொருந்திய அயன்படையை என்மேல் செலுத்துவதற்கு முன்பு; முற்கொள்வேன் எனும் முயற்சியன் - (அதனை முற்படக் கொண்டு (இவர்மேற்) செலுத்துவேன் என்னும் போர்த்தொழில் முயற்சியை உடையவனாய்ச் சென்று; மறை முறை மொழிந்த சொல்கொள் வேள்வி - வேத முறைப்படி விதிக்கப்பட்ட மந்திரங்களைக் கொண்ட யாகத்தினை; போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை - சென்று தொடங்குதற்குப் பொருந்திய இந்திரசித்தனின் மனத்துணிவை; மல்கொள் தோளவர் உணர்ந்திலர் - வலிமை மிக்க புயங்களை உடையவரான இராம இலக்குவர் உணராதவர்களாய், அவனது வஞ்சனைத்திறனை (அறவே) மறந்தாராயினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Before these two loose the shining weapon of the four-faced god on me,
  2. I will strike first' — that was his purpose; the resolve of him who had gone
  3. to begin the sacrifice with the spells laid down in the order of the Vedas
  4. the strong-shouldered ones did not perceive; they forgot the business of war.

What the poem says

Intiracittu means to strike first, before the brothers can use Brahmā's weapon on him. He has gone to perform a Vedic fire sacrifice with the proper mantras, which will give him the power to release the weapon.

Irāmaṉ and Ilakkuvaṉ have no idea what he is planning. Believing he has fled, they put the fighting out of their minds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'el koḷ nāṉmukaṉ paṭaikkalam ivar eṉmēl viṭā muṉ
muṟkolvēṉ' eṉum muyaṟciyaṉ, maṟai muṟai moḻinta
col koḷ vēḷvi pōyt toṭaṅkuvāṉ amaintavaṉ tuṇivai
mal koḷ tōḷavar uṇarntilar; amart toḻil maṟantār.