கம்பராமாயணம் 8576 · யுத்த 21.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்னின் மௌலியன் வீடணன் - பொன்னாலாகிய முடியினைத் தரித்தவனாகிய வீடணன்; இன்னதே கடிது இயற்றுவன் - (உணவு கொணர்தலாகிய) இச்செயலை விரைந்து செய்வேன்; எனத் தொழுது எழுந்தான் - எனக்கூறி (இராமனை) வணங்கி எழுந்தவனாய்; தமரொடும் போனான் - தம்மவரோடும் போயினான்; கன்னல் ஒன்றில் - (அங்ஙனம் போனவன்) ஒரு நாழிகைக்குள்; ஓர் காலினின் வேலையைக் கடந்தான் - ஒப்பற்ற காற்றினையொத்துக் கடலினைக் கடந்து சென்றான்; அன்ன வேலையின் - அந்தச் சமயத்தில்; இராமன் இளையவற்கு ஈது அறைந்தான் - இராமபிரான் தன் தம்பியாகிய இலக்குவற்குக் (பின்வருமாறு) கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I will do this at once,' he said, bowed and rose,
- Vīṭaṇaṉ of the golden crown, and went with his people;
- in a single nāḻikai he crossed the sea like the wind;
- and at that time Irāmaṉ said this to his younger brother.
What the poem says
Vīṭaṇaṉ bows, promises to be quick, and leaves with his own followers. Moving as fast as the wind, he crosses the sea within a single nāḻikai, about twenty-four minutes.
Meanwhile Irāmaṉ turns to Ilakkuvaṉ with instructions of his own.