கம்பராமாயணம் 8577 · யுத்த 21.90

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தெய்வ வான்பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய்கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நானிவை ஆற்றினன் வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையைக் கா' எனப் போர்க்களம் கடந்தான்.

பொருள் · Meaning in Tamil

தெய்வவான் பெரும் படைகட்கு - தெய்வத்தன்மை வாய்ந்த உயர்ந்த பெருமை மிக்க ஆயுதங்களுக்கு; வரன் முறை திருந்து மெய்கொள் பூசனை - வரன் முறையாகத் திருந்திய மெய்ம்மையோடு பொருந்திய வழிபாடுகளை; இயற்றினம் விடும் இது விதியால் - செய்தோமாகி (ப்பிறகு அவற்றை) ஏவுகின்ற இதுவே முறையான செயலாகும்; ஐய! - ஐயனே! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் - நான் அவ்வழிபாடுகளைச் செய்து முடித்தோனாகி (இங்கு திரும்பி) வரும் வரையில்; கை கொள் சேனையைக் - அணி வகுத்தலைக் கொண்ட (நமது) சேனையை, “கா” எனப் போர்க்களம் கடந்தான் - (இடரின்றி) பாது காத்திருப்பாயாக” என்று கூறிப் போர்க்களத்தை விட்டு நீங்கிப் புறத்தே சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For the great divine weapons, the rule is that we perform
  2. true worship, set right in due order, and then release them;
  3. sir, until I have done that and come back,
  4. guard the army in its ranks,' he said, and left the battlefield.

What the poem says

Irāmaṉ explains that the divine weapons must be worshipped with the proper rites before they can be used, and that he is going to perform this worship now.

He asks Ilakkuvaṉ to guard the army until he returns, and leaves the battlefield. Both Irāmaṉ and Vīṭaṇaṉ are now away, leaving Ilakkuvaṉ and the monkeys exposed to Intiracittu's plan.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'teyva vāṉ perum paṭaikaṭku varaṉmuṟai tiruntu
mey koḷ pūcaṉai iyaṟṟiṉam viṭum itu vitiyāl;
aiya! nāṉ avai āṟṟiṉeṉ varuvatu ōr aḷavum
kai koḷ cēṉaiyaik kā' eṉap pōrkkaḷam kaṭantāṉ.