கம்பராமாயணம் 8578 · யுத்த 21.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தந்தையைக் கண்டு - (போர்க்களத்தை விட்டு மறைந்து இலங்கையை அடைந்த இந்திரசித்து) தந்தையாகிய இராவணனைக் கண்டு; புகுந்துள தன்மையும் - (போரில்) நிகழ்ந்துள்ள செயலையும்; தன்மேல் - தன் மீது; முந்தை நான்முகன் படைக்கலம் - பழையோனாகிய பிரமனது படைக்கலத்தை; தொடுக்குற்ற முறையும் - (பகைவர் தொடுத்தற்கு எண்ணிய முறைமையையும், சிந்தையுள் புகச் செப்பினன் - (தன் தந்தையின்) மனத்திற்பதியும்படி எடுத்துரைத்தான்; அனையவன் திகைத்தான் - (அதனைக் கேட்டுணர்ந்த) அவ் இராவணன் திகைப்புற்றவனாகி; எந்தை! என் இனிச் செயத்தக்கது - “எந்தாய்! இப்பொழுது நம்மாற் செய்யத் தக்கது யாது?”; இசை என, இசைத்தான் - சொல்வாயாக எனக் கேட்க (அவ்விந்திரசித்தனும்) (கீழ்க்கண்டவாறு) சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing his father, he told him what had happened,
- and how the brothers had meant to loose on him the weapon of the ancient four-faced god,
- so that it sank into his mind; the king was bewildered:
- 'My son, what is to be done now? Tell me,' he said; and the son spoke.
What the poem says
Back in Ilaṅkai, Intiracittu tells his father everything, including that the brothers had been on the point of using Brahmā's weapon against him.
Irāvaṇaṉ is shaken. He calls his son 'my father', an affectionate form of address, and asks him what they should do now. Intiracittu begins to explain his plan.