கம்பராமாயணம் 8579 · யுத்த 21.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தன்னைக் கொல்வது துணிவரேல் - (பிறர் தன்னைக் கொல்லுதற்குத் துணிந்தாராயின்; தனக்கு அது தகுமேல் - தனக்கு அவ்வாறு தன்னைக் கொல்லத் துணிந்தவரைக் கொல்வதென்பது இயையுமானால்; முன்னர்க் கொல்லிய முயல்க - (அவர்கள் அச்செயலைத் தொடங்குதற்கு) முன்பே (அன்னோரைக் கொல்லுதற்கு முயலுக; என்று அறிஞரே மொழிந்தார் - என்று அறிஞர்களே கூறியுள்ளனர்; அன்ன போர் அவர் அறிவுறா வகை மறைந்து - (அவர்களின் கூற்றினுக்கு ஏற்ப நமக்கு நன்மையை விளைவிக்கின்ற) அத்தகைய நல்ல போர்த் தொழிலினை (அப்பகைவராகிய) மானுடர் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து நின்று; அயன்தன் வெல்நற் போர்ப்படை விடுதலே நலம் - பிரம்ம தேவனுடைய வெற்றி தருகின்ற நல்ல போர்ப்படையாகிய பிரம்மாத்திரத்தை விடுவதே நன்மை தரும் செயலாகும்; இது விதி - இதுவே முறையுமாகும்.
“தற்கொல்லியை முற்கொல்க” என்பது முதுமொழி. அதற்கேற்பச் செயல்படவேண்டுமென்கிறான் இந்திரசித்து. தற்காப்பின் பொருட்டு எதுவும் செய்யலாம் என்பதற்கியைய ஆற்றல் மிக்க பகைவராகிய இராம இலக்குவர் அறியா வண்ணம் அவர்கள் மேல் அயன் படையை ஏவ வேண்டும் என்கிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"If they resolve to kill you, and if it is fitting for you to do so,
- strive to kill them first" — so the wise have said;
- so the good course is to fight that way, hidden so that they do not know,
- and loose Ayaṉ's good, victorious war weapon; this is the rule.'
What the poem says
Intiracittu quotes a proverb: 'kill the one who would kill you before he kills you.' If an enemy is set on killing you and you are able to kill him, strike first.
So he proposes to hide where the brothers cannot see him and fire Brahmā's (Ayaṉ's) weapon at them before they can do the same to him. In his view, self-preservation justifies such a hidden attack.