கம்பராமாயணம் 8580 · யுத்த 21.93

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அப்படை தொடுத்தே
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர்; அத் தவத்தர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி
முடிப்பல், அன்னவர் வாழ்வை ஓர் கணத்து' என்று முடித்தான்.

பொருள் · Meaning in Tamil

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் - யான் (பிரம்மாத்திரத்தை) தொடுக்கின்றேன் என்ற செய்தியை (அப்பகைவர் அறிந்தனராயின்; அப்படை தொடுத்தே தடுப்பர் - அதே பிரம்மாத்திரத்தை (எதிராகத்) தொடுத்து (யான் ஏவியதனைத்) தடுத்து விடுவார்கள்; அத்தவத்தோர் காண்பரேல் கொல்லவும் வல்லர் - தவத்திற் சிறந்தோராகிய அவர்கள் (என்னை நேரிற்) காண்பார்களாயின் (உடனே) கொன்றுவிடவும் வல்லவர்கள்; இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை - (இது பற்றிச் சங்கடம் ஒன்றும் நேர்ந்து விடப் போவதில்லை; நல்வேள்வியை இயற்றி - நன்மையைத் தரும் யாகம் ஒன்றினைச் செய்து; அன்னவர் வாழ்வை ஓர் கணத்து முடிப்பல் - அம்மனிதர்களது வாழ்வை ஒரு கணப் பொழுதிற்குள் முடிப்பேன்; என முடித்தான் - என உறுதியாகக் கூறினான். (இந்திரசித்து)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If they know that I am loosing it, they will loose that same weapon
  2. and block it; if they see me, those ascetics can even kill me;
  3. there is no difficulty in it; performing a good sacrifice,
  4. I will end their lives in an instant,' he said, and finished.

What the poem says

Intiracittu explains why secrecy matters. If the brothers know he is about to fire the weapon, they will fire their own to cancel it, and if they see him they are strong enough to kill him on the spot.

He calls them 'ascetics', since the exiled princes live as forest hermits. But hidden, after performing the proper sacrifice, he is confident he can end their lives in a moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'toṭukkiṉṟēṉ eṉpatu uṇarvarēl ap paṭai toṭuttē
taṭuppar; kāṇparēl, kollavum vallar; at tavattōr;
iṭukku oṉṟu ākiṉṟatu illai; nal vēḷviyai iyaṟṟi
muṭippaṉ, aṉṉavar vāḻvai ōr kaṇattu' eṉa muṭittāṉ.