கம்பராமாயணம் 8581 · யுத்த 21.94

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னவர் என்னை மறந்தனர் நின்று இகல் இயற்ற - அந்த இராம இலக்குவர் என்னை அறவே மறந்தவராய் நின்று போர் செய்யுமாறு; துன்னு போர்ப்படை - நெருங்கிய சேனைகளை; முடிவிலாது அவர் வயின் தூண்டின் - ஒழிவின்றி அவர்கள் மீது செலுத்துவாயாயின்; பின்னை நின்றது புரிவென் - பின்பு (நான் செய்யவேண்டியதாய்) எஞ்சி நின்ற செயலைச் செய்வேன்; என்று அன்னவன் பேச - என்று அவ் இந்திரசித்து கூறினானாக; மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம்மொழி வழங்கும் - மன்னவனாகிய இராவணன் தன் முன்னால் நின்றிருந்த மகோதரனுக்கு (பின்வரும்) இம்மொழியினைக் கூறுவானாயினான்.

பிரம்மாத்திரம் நிராயுதரை அழிக்காது எனவே, இலக்குவனும் வானர சேனையும் போரில் ஈடுபட்டவர்களாயிருந்தாலே தான் பிரம்மாத்திரம் எய்தல் பயன் தரும் என்பதுணர்ந்து இந்திரசித்தன் இவ்வாறு கூறுகிறான் என்பதே பொருத்தமானது என்பது மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. இந்திரசித்து என்னவாயினன் என்று இராமலக்குவர் எண்ண இடம் கொடாமல் மேலும் மேலும் சேனைகளை அனுப்பிப் போர்ச் செயலில் அவர்களை ஈடுபடுத்தினாலே பிரமாத்திரம் எய்த இயலும் என்னும் கருத்து பொருந்துமேல் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you send packed war-hosts against them without end,
  2. so that they fight on, forgetting me,
  3. then I will do what remains,' he said; and as he spoke
  4. the king gave these words to Makōtaraṉ, who stood before him.

What the poem says

Intiracittu asks his father to keep sending troops against the brothers so that they stay busy fighting and forget about him. Then he will do the rest.

The commentary gives two explanations. One is that the Brahmā weapon will not strike the unarmed, so Ilakkuvaṉ and the monkeys must be kept in arms and fighting. The other is simply that a steady stream of attackers will keep the brothers from wondering where Intiracittu has gone. Irāvaṇaṉ turns to Makōtaraṉ, one of his generals.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṉai aṉṉavar maṟantaṉar niṉṟu ikal iyaṟṟa
tuṉṉu pōrp paṭai muṭivu ilātu avarvayiṉ tūṇṭiṉ
piṉṉai, niṉṟatu puriveṉ 'eṉṟu aṉṉavaṉ pēca
maṉṉaṉ, muṉ niṉṟa makōtaraṟku im moḻi vaḻaṅkum.