கம்பராமாயணம் 8583 · யுத்த 21.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாயை என்றன - மாயை என்று கூறப்படுவன; வல்லன - (பகைவரை வெற்றி கொள்ளுதற்குரிய) தந்திரம் போன்ற பிற மிக்க செயல்கள்; யாவையும் வழங்கி - ஆகிய அனைத்தையும் செய்து; தீ இருட் பெரும் பரப்பினை - கொடிய மிக்க இருள் தொகுதியை; உலகு ஒரு மூன்றையும் செறிவு உறத்திருத்தி - உலகங்கள் மூன்றினையும் மூடுமாறு நெருக்கமாக உண்டாக்கி; நீ ஒருத்தனே நிமிர்வாய் - நீ ஒருவனே உயர்ந்தோங்கும் வல்லமை உடையாய்; போய் - (இன்று பெரும் படையுடன் (இவ்விடம் விட்டு) நீங்கிச் சென்று; உருத்தவர் உயிர் குடித்து உதவு எனப் புகன்றான் - நம்மிடம் வெகுண்டவருடைய உயிரை (இந்திரசித்தனுக்கு உறு துணையாக) பருகி உதவுவாயாக எனக் கூறினான் (இராவணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Using all the arts that are called illusion,
- and spreading a vast expanse of evil darkness thick and close,
- you alone can tower over all three worlds;
- go in wrath, drink their lives and help us,' he said.
What the poem says
Irāvaṇaṉ tells Makōtaraṉ to use every kind of sorcery and illusion he commands and to spread a thick, evil darkness over the three worlds. Makōtaraṉ alone, he says, is capable of this.
His task is to drink the enemies' lives, and so to help Intiracittu's plan succeed.