கம்பராமாயணம் 8589 · யுத்த 21.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாள் எயிற்று அரக்கர் சலத்தின் மடித்த வாயினர் - வாள் போற்கூரிய பற்களையுடைய அரக்கர்கள் வெகுளியால் மடித்த வாயினை உடையவராய்; தம் வலத்தின் பிடித்த திண் படை - தம் வலக்கையிலே பற்றிய திண்ணிய ஆயுதங்களை; விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து - அசைக்குந்தோறும் அசைக்குந்தோறும் மாறுபட்டு; பொடித்த வெம்பொறி கொதித்து மேல்போவன - வெளிப்பட்டுத் தோன்றிய வெவ்விய அனற் பொறிகள் கனன்று மேலே போவன; தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ போன்ற - மின்னலும் விண்மீன் தொகுதிகளும் வானிடத்தே விளங்குவன ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lightning and swarms of stars flickering in the sky:
- such seemed the hot sparks that burst out, boiled, and flew upward
- as the sword-toothed demons, lips curled in wrath,
- brandished again and again the strong weapons gripped in their right hands.
What the poem says
The sword-toothed demons, lips twisted in fury, shake their weapons in their right hands, and every shake throws off a shower of sparks.
The sparks flying upward look like lightning and swarms of stars glittering across the sky.