கம்பராமாயணம் 8591 · யுத்த 21.104

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சங்கும், பேரியும், தாளமும், காளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும் புரவியின் ஓதையும், பொலந் தேர்
வெங்கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை.

பொருள் · Meaning in Tamil

சங்கும், பேரியும், காளமும் தாளமும் - சங்கு, பேரிகை, எக்காளம், தாளம் முதலானவற்றின் ஒலிகளும்; தலைவர் சிங்க நாதமும் - படைத்தலைவர்களது சிங்கத்தின் முழக்கத்தை ஒத்த பெரு முழக்கமும், சிலையின் நாண் ஒலிகளும் - வில் நாணின் ஒலிகளும், சினமாப் பொங்கும் ஓதையும் - வெகுளியுற்ற யானைகள் கிளர்ந்தெழுப்பிய பிளிற்றொலியும்; புரவியின் அமலையும் - குதிரைகளின் கனைப்பொலியும்; பொலந் தேர் வெங்கண் ஓலமும் - பொன்மயமான தேர்களின் சக்கரங்களின்றெழும் ஓசையும்; மால் என உலகை விழுங்கிய - திருமாலைப் போன்று உலகினை (தன் அகத்திட்டு) விழுங்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Conches, war drums, trumpets and cymbals, the commanders'
  2. lion roars, the twang of bowstrings, the swelling trumpeting
  3. of enraged elephants, the neighing of horses, the fierce rumble
  4. of golden chariots: like Māl, they swallowed the world.

What the poem says

The noise of Makōtaraṉ's army is overwhelming: conches, drums, trumpets and cymbals, the lion-like roars of the commanders, twanging bowstrings, raging elephants, neighing horses and the rumble of golden chariots.

The din fills everything, swallowing the world just as Māl (Viṣṇu) swallowed the universe to keep it safe during the cosmic flood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅkum, pēriyum, kāḷamum, tāḷamum, talaivar
ciṅka nātamum, cilaiyiṉ nāṇ olikaḷum, ciṉa māp
poṅkum ōtaiyum puraviyiṉ amalaiyum, polan tēr
veṅ kaṇ ōlamum, māl eṉa, viḻuṅkiya ulakai.