கம்பராமாயணம் 8592 · யுத்த 21.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1புக்க தார்ப் பெரும் போர்ப்படை, பறந்தலைப் புறத்தில்
தொக்கதால்; நெடு வானரத் தானையும் துவன்றி
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருத்த
மிக்க வான்படை விடுகணை மாமழை விலக்கி.
பொருள் · Meaning in Tamil
பெரும் போர்ப்படை பறந்தலைப் புறத்தில் புக்க - பெரும் போரை இயற்றுதற்குரிய அந்த (அரக்கர் சேனை போர்க்களத்துப் புகுந்தது; நெடுவானரத் தானையும் துவன்றித் தொக்கது - நெடிய குரங்குப்படையும் நெருங்கிக் கூடிற்று; மிக்க வான் படை விடுகணை மாமழை விலக்கி - (பிறகு வானரப் படையானது) மிகுதியாக இருந்த பெரிய அரக்கர் படை ஏவுகின்ற அம்பு மழையினைத் தடுத்து; உருமின் ஒக்க ஆர்த்தன, உறுக்கின தெழித்தன - இடி போன்று ஒருங்கே ஆரவாரித்து, தண்டித்து அதட்டினவாய் வெகுண்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great war host entered the open field and massed there;
- the vast monkey army too pressed close and gathered,
- warding off the great rain of arrows loosed by the mighty sky-filling host,
- and all together roared like thunder, snarled and bellowed.
What the poem says
The demon host reaches the battlefield, and the monkey army gathers again to meet it.
The monkeys fend off the storm of arrows the demons shoot at them, then roar together like thunder, snarling and shouting defiance.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukkatāl perum pōrp paṭai, paṟantalaip puṟattil
tokkatāl; neṭu vāṉarat tāṉaiyum tuvaṉṟi
okka ārttaṉa, uṟukkiṉa, teḻittaṉa, urumiṉ
mikka vāṉ paṭai viṭu kaṇai mā maḻai vilakki.