கம்பராமாயணம் 8596 · யுத்த 21.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கதிர் அயில் படைக்குலம் வரன்முறை முறை கடாவ - ஒளி பொருந்திய கூர்மையான ஆயுதத் தொகுதிகளை (அரக்கர்கள் அடுத்து அடுத்து முறையே செலுத்துதலால்; குரக்கு இனம் எதிர் நடக்கில - குரங்குத் தொகுதிகள் அரக்கர் எதிரே நடக்கவியலாதவை ஆயின; அதிர் பிணப்பெருங் குன்றுகள் படப்பட - அதிர்ச்சியுற்று விழும் பிணங்களாகிய பெருமலைகள் மேலும் மேலும் உண்டாவதாலும்; அழிந்த உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட - (ஆயுதங்கள் பட்டு உடல் சிதைந்தமையால் தோன்றிய குருதிப் பேராறுகள் (போர்க்களத்தில்) திசைகள் தோறும் ஓடுதலாலும்; அரக்கரும் இயங்கார் - அரக்கரும் (அப்போர்க்களத்தில்) மேற்செல்லுதற்கு இயலாதவராயினர்.
கதிர் - ஒளி, அயில் - கூர்மை, கடாவுதல் - செலுத்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the hosts of bright sharp weapons were driven on in order, one after another,
- and great quaking hills of corpses piled up and up,
- and huge rivers of spilled blood ran in every direction,
- the monkey hordes could not advance, and neither could the demons move.
What the poem says
Wave after wave of sharp, gleaming weapons hold the monkeys back.
But the corpses pile up into hills, and rivers of blood run in every direction, so that the demons cannot advance either. The battle grinds to a standstill amid its own slaughter.