கம்பராமாயணம் 8597 · யுத்த 21.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யாவர் ஆங்கு இகல் வானரர் ஆயினர் - யார் யார் அப்போர்க்களத்தில் மாறுபட்டுப் பொருதலை உடைய வானரராகி வந்துள்ளார்களோ; எவரும் தேவர் ஆதலின் - அவர்கள் அனைவரும் (முன்னைத் தம் உண்மை நிலையில்) தேவர்களே ஆதலால்; அவரொடும் விசும்பிடைத் திரிந்தார் - (தாம் உயிர் துறந்ததால் வானர உடம்பை விடுத்து) அத்தேவர்களோடும் (ஒன்று கூடி) விண்ணுலகில் உலவுவாராயினர்; மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் - (அங்ஙனம் பிரிந்து சென்ற அவர்களை மீண்டும் அடையவேண்டும் என்னும் காதலால் தளர்ந்து மெலியும் வானுலக மகளிராகிய அரம்பையர்; விரும்பி ஆவி ஒன்றிடத் தழுவினர் - (அவர்களை விரும்பி உயிரோடொன்றாக இறுகத் தழுவியவராய்; பிரிவு நோய் அகன்றார் - பிரிவுத் துன்பம் தீர்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All those who had become warring monkeys there,
- being gods, went roaming the sky with the gods;
- and the celestial nymphs, pining with longing, gladly
- embraced them till their souls were one, and were rid of the pain of separation.
What the poem says
In the epic, the monkeys of Irāmaṉ's army are gods who took monkey form to help Viṣṇu in his earthly life. So the monkeys who die here do not simply perish: they shed their monkey bodies and return to heaven as gods.
The celestial nymphs, who have pined for them all this time, embrace them so closely that their souls seem to merge, and the long pain of separation ends.