கம்பராமாயணம் 8598 · யுத்த 21.111

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே கடனா,
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின, அமலன்
சரத்தின் மேல் இனிப் பவித்திரம் உள எனத் தகுமே?

பொருள் · Meaning in Tamil

கரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா - ஒளித்துச் செய்யும் சூழ்வினையும், வஞ்சனையும், களவுத்தன்மையும் ஆகிய இவற்றையே தம் செயல் முறையாகக் கொண்டு; இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா - இரக்கம் முதலான அறநெறி ஏதும் இல்லாத; அரக்கரைப் பெருந்தேவர்கள் ஆக்கின - (கொடிய) அரக்கர்களையும் பெருமையுடைய தேவர்களாக ஆக்கிய; அமலன் சரத்தின் - தூயோனான இலக்குவனின் அம்பினைக் காட்டிலும்; வேறு இனிப் பவித்திரம் உள எனத் தகுமே - தூய்மை விளைவிப்பன பிற உளவெனல் பொருந்துவதோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those demons whose whole duty was hidden sorcery, deceit and theft,
  2. who had no path of dharma at all, beginning with compassion,
  3. were turned into great gods by the arrows of the pure one:
  4. can anything else now be called more purifying?

What the poem says

The demons who die are transformed too. Their whole way of life was trickery, deceit and theft, without any trace of compassion or righteousness, yet being killed by Ilakkuvaṉ's arrows turns them into great gods.

The poet asks whether there can be any purifier more powerful than the arrows of the pure Ilakkuvaṉ. Behind the line lies the devotional idea that death at the hands of the divine grants liberation even to the wicked.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karakkum māyamum, vañcamum, kaḷavumē kaṭaṉā,
irakkamē mutal tarumattiṉ neṟi oṉṟum illā
arakkaraip perun tēvarkaḷ ākkiṉa, amalaṉ
carattiṉ vēṟu iṉip pavittiram uḷa eṉat takumē?