கம்பராமாயணம் 8600 · யுத்த 21.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கும்பகன்னன் ஆண்டு இட்டது - (இராவணன் தம்பியாகிய) கும்பகருணன் அப்போர்க்களத்திலே இட்டுச் சென்றதும்; வான் வயிர குன்றின் வெம்பு வெஞ்சுடர் விரிப்பது - பெரிய வயிர மலையினைப் போன்று வெதும்பச் செய்யும் கடுங்கதிர்களை விரிப்பதும்; மேல்நாள் தேவரை தும்பையின் தலைத் துரந்தது - முன்னாளில் (அரக்கரொடு பொருதற்கு வந்து தேவர்களைத் தும்பைப்போரில் (தோற்று ஓடும்படி) துரத்தியதும்; இம்பர் ஞாலத்தை நெளிப்பது - (பொறுத்தற்கரிய பாரத்தால்) இப்பூமியை நெளியச் செய்வதும் ஆகிய; சுடர் மணித்தண்டு ஒன்று மாருதி எடுத்தான் - ஒளியுடைய மணிகள் பதிக்கப்பெற்ற தண்டாயுதம் ஒன்றினை வாயுவின் மகனான அனுமன் (தன் கையில்) எடுத்துக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one Kumpakaṉṉaṉ had left lying there, which spread fierce, scorching rays
- like a great diamond mountain, which in days gone by
- had driven the gods before it in pitched battle,
- a gleaming jewelled mace that bent this earth: Māruti took it up.
What the poem says
Aṉumaṉ picks up the jewelled mace that Kumpakaruṇaṉ dropped on the field when he was killed.
It blazes like a mountain of diamond, once routed the gods themselves in open battle, and is so heavy that the earth sags under it. The metre changes here to a quicker, rhythmic form for the action that follows.