கம்பராமாயணம் 8601 · யுத்த 21.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இகல் நின்றான் - (அரக்கர் மேல் பகைகொண்டு நின்றவனாகிய அனுமன்; காற்று அன்று இது கனல் அன்று என - இது காற்றும் அன்று தீயும் அன்று என்று; இமையோரிடை காணா - தேவர்கள் (தன்னோடு அக்காற்று தீ ஆகியவற்றிற்கு) வேற்றுமை உணராதவாறு; ஏற்றம் கடுவிசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் - மிகுந்த கடுவேகத்துடனே மிக்க கொலைத் தொழிலில் நிலை பெற்றுள்ள தன்மையால்; கூற்றம் சீற்றம் தனி உருவாய் - கூற்றுவனாகிய தெய்வம் சீற்றத்தையே தனது உருவாகக் கொண்டு; இடை தேறாதது ஓர் மாறு ஆய் - (தன்னை இன்னான் என) வேற்றுமை தெளிந்துணர இயலாத நிலையில் மாறுபட்டு கொடுமுனை வந்தெனக் கொன்றான் - கொடிய போர் முனைக்கு வந்தது எனும்படி (கையிலுள்ள தண்டாயுதத்தால் அரக்கரைக் கொன்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the gods could not tell, saying 'This is not the wind, this is not fire,'
- with towering, terrible speed and a nature given over to slaughter,
- as if Death had come to the cruel front in a form made of wrath alone,
- changed beyond all recognition, the one who stood in enmity killed.
What the poem says
Mace in hand, Aṉumaṉ storms through the demon army so fast and so destructively that the gods cannot tell him apart from his father the wind, or from fire.
He looks like Death himself come to the front line, his body made of pure rage and so transformed that no one can recognise him, and he kills everything in his path.