கம்பராமாயணம் 8603 · யுத்த 21.116

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல் விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான், உருக்கரைத்தான்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், 'உலகு ஒருமூன்றையும் வலத்தால்
அளந்தானும் முனிவனே? 'என இமையோர்களும் அயிர்த்தார்.

பொருள் · Meaning in Tamil

கிளர்ந்தாரையும், கிடைத்தாரையும் கனல் விழித்தான் கிழித்தான் - (அனுமன் சினத்தால்) பொங்கி எழுந்தாரையும், எதிர்ப்பட்டாரையும் தீப்பொறி தோன்ற (ச்சினந்து) நோக்கியவனாய் அவர்தம் உடம்பைக் கிழித்தெறிந்தான்; களந்தான் ஒரு குழம்பாம் வகை அரைத்தான் உருக்கரைத்தான் - போர்க்களம் எங்கும் (நிணக்) குழம்பாகுமாறு (அரக்கர் உடம்புகளை) அரைத்து உருவின்றிக் கரைத்தவனாய்; வளர்ந்தான் நிலை உணர்ந்தார் - பேருருவாக வளர்ந்து தோன்றிய அவனது நிலையை உணர்ந்தவர்களாகிய; இமையோர்களும் - தேவர்களும்; உலகு ஒரு மூன்றையும் வலத்தால் அளந்தானும் முன் இவனே - ஒப்பற்ற மூன்று உலகங்களையும் தனது வலிமையால் முன்னம் அளந்தவனும் இவன்தானோ? என அயிர்த்தார் - என ஐயுற்று வியந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who rose against him and those he met, he tore apart, his eyes shooting fire;
  2. he ground them so the field became a single paste, dissolving their forms;
  3. seeing how he had grown, the gods wondered, "He who once measured
  4. the three worlds with his might — was it this one?"

What the poem says

Aṉumaṉ grows to a huge size as he fights, and grinds the rākṣasas into the earth until the battlefield is a mass of flesh and blood.

The gods watching from the sky recall Viṣṇu's Vāmana form, the dwarf who grew vast and measured the three worlds in three strides. They wonder whether Aṉumaṉ is that same god.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḷarntāraiyum kiṭaittāraiyum kiḻittāṉ, kaṉal viḻittāṉ;
kaḷamtāṉ oru kuḻampu ām vakai araittāṉ, uruk karaittāṉ;
vaḷarntāṉ nilai uṇarntār, 'ulaku oru mūṉṟaiyum valattāl
aḷantāṉum muṉ ivaṉē? 'eṉa imaiyōrkaḷum ayirttār.